tamilnadu

img

மகளிருக்கு நெருக்கடி ஏற்படுத்தும் நுண்நிதி நிறுவனங்கள் மாதர் சங்கத்தினர் புகார்

கோவை, மே 21 –  வருவாயின்றி நெருக்கடியில் உள்ள பெண்களிடம் நுண் நிதி நிறுவனங்கள் அநியாய வட்டியை வசூலித்து நெருக்கடி அளிப்பதாக குற்றம்சாட்டி கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் மாதர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்த னர். இதுதொடர்பாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.ராதிகா, நிர்வாகிகள் சுதா,  வனஜா நடராஜன், பங்கஜவல்லி உள்ளிட்டோர் வியாழ னன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய்  அலுவலர் ராமதுரை முருகனிடம் அளித்த மனுவில் கூறியி ருப்பதாவது,  கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மே  24 ஆம் தேதி முதல் தற்போது வரை ஊரடங்கு நடைமுறை யில் உள்ளது.

இதனால் இயல்பான பணிக்கு சென்று, வரு வாயை ஈட்ட முடியாத நிலையில் பொதுமக்கள் உள்ளனர். ஆகவே, நிதி நிறுவனங்கள் தவணை காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால்,  இந்த நுண்நிதி நிறுவனங்கள் அரசின் உத்தரவுகளை மதிக்கா மல், பெண்கள் அங்கம் வகிக்கும் சுய உதவிக் குழுக்களி டம் உடனடியாக நிலுவை தொகைகளை வட்டியுடன் செலுத்த  நிர்பந்திக்கின்றனர். எனவே, சுயஉதவிக் குழுக்களின் மூலம் பெண்கள் பெற்ற  கடன்களை உடனடியாக திருப்பி செலுத்த வேண்டுமென்று நுண்நிதி நிறுவனங்களில் நெருக்கடி கொடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு முழுமை யாக இயல்பு நிலை திரும்பும் வரையில் தவனை காலத்தை  நீட்டிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை மாவட்ட  நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

;