கோவை, ஜூன் 29- முப்பதாண்டு காலமாக சுகாதார சேவையாற்றி பணி ஓய்வு பெற்ற தூய்மைப் பணியாளரை மார்க்சிஸ்ட் கட்சியினர் கெளரவித்து வழியனுப்பி வைத்தனர்.
கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளராக உள்ளவர் ராமசாமி. இவர் ஆவாரம்பாளையத் தில் 10 வருடங்களாகவும், வினோபாஜி நகரில் 15 வருடங்களாகவும் சுகாதா ரப் பணியை மேற்கொண்டு வந்தார். இந்நி லையில், இவரின் பணிக்காலம் நிறைவ டைந்து தற்போது ஓய்வு பெற உள்ளார். இதனையடுத்து சுகாதார சேவையாற்றிய ராமசாமி மற்றும் அவ ரின் குடும்பத்தை கெளரவிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கட்சியின் வினோபாஜி கிளை யினர் பிரிவு உபசார விழாவை நடத் தினர்.
இதில், ராமசாமி மற்றும் அவரது மனைவி பழனியம்மாள் ஆகியோருக்கு சால்வை அணிவித்தும், புத்தாடை, இனிப்புகள் மற்றும் நிதி உதவி வழங்கி யும் கெளரவிக்கப்பட்டனர். முன்னதாக இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் பீளமேடு நகரச் செயலாளர் கே.பாண்டி யன், மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் ஜோதிமணி, கிளைச் செயலாளர் செல்வம் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் பங் கேற்றனர்.