tamilnadu

img

தியாகி முத்து 67ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

கோவை, ஜூலை 8 -   தியாகி உப்பிலியபாளையம் முத்து நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில்  இந்திய  கம்யூ னிஸ்ட்  கட்சி  மற்றும்  மார்க்சிஸ்ட் கட்சி யின் தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

கோவை சிங்கநல்லூரில் உள்ள கோத்தாரி மில்லில் தொழிலாளியாக  பணியாற்றி வந்தவர் உப்பிலியபாளை யம் முத்து.  இந்த ஆலையில் இடதுசாரி தொழிற்சங்கத்தைக் கட்டுவதிலும், தொழிலாளிகளின் உரிமைகளுக்காக போராடுவதிலும் முன்னின்ற இவரை பஞ்சாலை முதலாளியின் அடி யாட்கள்  மில்லுக்குள்ளேயே  வைத்து கடந்த 1953 ஆம்  ஆண்டு  ஜூலை  மாதம் 7 ஆம்  தேதி  படுகொலை  செய்த னர்.

இவரது நினைவு தினத்தை கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் தொடர்ந்து நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  

இதன்ஒருபகுதியாக தியாகி முத்து வின்  67ஆம் ஆண்டு நினைவு தினத்தை  முன்னிட்டு செவ்வாயன்று மாலை  கம்யூனிஸ்ட்  கட்சி  தோழர்கள்  முத்து  நினைவிடத்தில்  கூடி  அஞ்சலி  செலுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின்  கிளை   செயலாளர் நாகேந்திரன் தலைமை  தாங்கினார்.

இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியின்  கிளை  செயலாளர்  தங்க வேல்  வரவேற்றுப் பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன்  ஏற்றி வைத்தார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் கொடியை இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செய லாளர் வி.எஸ்.சுந்தரம் ஏற்றிவைத் தார்.  

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்ட  மன்ற உறுப்பினர் கே.சி.கருணா கரன், இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியின் மாவட்ட பொருளாளர் யு.கே.சுப்பிர மணியன், ஏஐடியுசி மாவட்ட பொதுச்  செயலாளர் சி.தங்கவேல் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

;