tamilnadu

img

சூயஸ் நிறுவனத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த ஒருவர் கைது - தமிழக அரசு அராஜகம்

சூயஸ் நிறுவனத்திற்கு எதிராக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்தவர் மீது வழக்கு பதிவு செய்து உக்கடம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தமிழக அரசின் இந்த அராஜக நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

உக்கடம் கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த அப்துல் ரசாக் தனது முகநூலில் சூயஸ் திட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். அதில் கோவை குடிநீர் விநியோகம் தனியார் மையமாக்கப்பட்டு விட்டது. குடிநீர் விநியோக உரிமை சூயஸ் நிறுவனத்திற்கு தரை வார்க்கப்பட்டுள்ளது. சிறுவாணி  மற்றும் பில்லூர் அணைகள் வெளிநாட்டு கம்பெனிகளுக்கு விற்கப்பட்டுவிட்டது. சூயஸ் நிறுவனம் செயற்கையாக குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலிக்க வாய்ப்புள்ளது. ஏழை மக்கள் காசு கொடுத்து குடிநீர் வாங்க இயலாது என்று தனது முகநூலில் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது இந்த கருத்து அனைத்தும் அரசாங்கத்திற்கு எதிராக இருப்பதாக கூறி உக்கடம் காவல் துறையினர் அவர்மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். 
ஆனால் இதுநாள் வரை சூயஸ் நிறுவனமோ, மாநகராட்சியோ 24 மணிநேரமும் எந்த அடிப்படையில் குடிநீர் வழங்கும். நாள் ஒன்றுக்கு ஒரு குடும்பத்திற்கு எவ்வளவு குடிநீர் வழங்கும். அதற்கான நீர் ஆதாரம் இருக்கிறதா? அதற்கான கட்டணம் என்ன? என்பது குறித்து தெளிவாக pகூறவில்லை.  மேலும் 24 மணிநேரமும் தண்ணீர் கொடுப்பதற்கு எந்த வித முகாந்திரமும் இல்லாத நிலையில் தொடர்ந்து சூயஸ் நிறுவனம் மக்களிடம் பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக காவல் துறை சூயஸ் நிறுவனத்திற்கு எதிராக கேள்வி எழுப்பும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 

;