திருப்பூர் ராக்கிபாளையம் பிரிவு மணியகாரம்பாளையம் சாலையில் வள்ளியம்மை நகர் 2ஆவது வீதி அருகே கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு குடிநீர் விரயமாகிச் சென்றதுடன், அந்த பகுதி சாலையும் பழுதடைந்து வந்தது. இது குறித்து இப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவித்தும் பழுதைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் திங்களன்று காலை அப்பகுதியைக் கடந்து சென்ற லாரியின் முன் சக்கரம் நீர்க்கசி வினால் உறுதித்தன்மையை இழந்து போன தார்ச்சாலையில், உள்ளே போய் சிக்கிக் கொண்டது. நீண்ட நேரம் போராடி இங்கிருந்து லாரியை மீட்க வேண்டிய நிலை ஏற்பட்டதுடன், அவ்வழியே போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இது போன்ற பாதிப் புகளை உடனுக்குடன் சரி செய்ய நடவடிக்கை எடுத்தால் விபரீதங்கள், இழப்புகள் நேராமல் தவிர்க்க முடி யும். மாநகராட்சி நிர்வாகம் இதை உணருமா என்று இப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.