tamilnadu

அச்சத்தை விதைக்கும் கும்பல் மனப்பான்மையை வேரறுப்போம்!

கடந்த செப்.5ஆம் தேதி  திருப்பூரில் விநாயகர் சிலை  கரைப்பு ஊர்வலம் தொடங்கிய நேரத்தில், அங்கேரிபாளையம் சாலை  வி.கே.கார்மெண்ட்ஸ் ஏற்றுமதி நிறுவன வளாகத்திற்குள் இந்து முன்னணியைச் சேர்ந்த சுமார் 60 பேர் அத்துமீறி நுழைந்தனர். காவி கொடிகள் கட்டிக் கொண்டு விநாயகர் சிலை வைக்கப்பட்ட வாகனத்தையும் வளாகத்திற்குள் கொண்டுவந்து, அங்கு வேலை செய்த தொழிலாளர் களையும், ஊழியர்களையும் அச்சு றுத்தி தாக்கி, வன்முறை வெறியாட் டத்தை அரங்கேற்றினர். இச்சம்பவம் சிசிடிவி கேமிராவில் தெளிவாகப் பதி வாகி உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இந்து முன்னணியினர் கேட்ட ரூ.10 ஆயிரம் தரவில்லை என்பதே இந்த கும்பல் வெறியாட்டம் அரங்கேற்றப்பட்டதற்குக் காரணம்.

அம்பலமான வன்முறைகள்

இச்சம்பவம் தொலைகாட்சி, பத்திரிகை ஊடகங்களில் வெளிவந்து தமிழகம் முழுவதும் மிகப்பெரும் கவ னிப்பைப் பெற்றது. இந்து முன்னணி அம்பலப்பட்டது. இது வெளிவந்த நிலையில் திருப்பூரின் வெவ்வேறு பகுதிகளில் பணம் தரவில்லை என்ப தற்காக இதேபோல் பனியன் நிறுவன கண்ணாடி உடைப்பு, ரத்த பரிசோ தனை நிலையத்தின் மீது தாக்குதல், மருந்தகத்தை அடைத்தபடி 5 நாட்கள் பிளக்ஸ் தட்டி கட்டி வைத்தது என இந்து முன்னணியினர் நிகழ்த்திய அராஜகங்கள் பலவும் சமூக வலைத்த ளங்களில் வைரலாகப் பரவின. கையும், களவுமாக அம்பலப்பட்ட பிறகு, இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் இச்சம்ப வத்தைக் “கண்டிப்பதாக” பொத்தாம் பொதுவாக அறிக்கை வெளியிட்டார். ஆனால் இதில் ஈடுபட்ட குற்றவாளி களைத் தங்கள் அமைப்பில் இருந்து நீக்கியதாகவோ, நடவடிக்கை எடுத்த தாகவோ யாருடைய பெயரையும், அவர்கள் வகித்த பொறுப்புகளையும் பட்டியலிட்ட விபரம் எதுவும் அந்த அறிக்கையில் இல்லை. அதேசமயம் தாக்குதலுக்கு ஆளான கம்பெனி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் இந்து முன்ன ணியைச் சேர்ந்த 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். எஞ்சிய வர்களைத் தேடி வருவதாகவும் கூறு கின்றனர். 60 பேரில் 4 பேரை மட்டும் கைது செய்துவிட்டு என்ன காரணத்தி னாலோ, பிரச்சனையை “சுமூகமாக” முடித்துக் கொள்ளப் பார்க்கிறது காவல் துறை! 

எதிர்ப்பும், மௌனமும்

திருப்பூர் பின்னலாடைத் தொழில் வரலாற்றில் முன்னெப்போதும் இத் தகைய கும்பல் வெறியாட்டம் நடத்தப் பட்டதில்லை. இந்த சம்பவத்திற்கு உட னடியாக திமுக, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட், காங்கிரஸ், இந்திய கம்யூ னிஸ்ட், மதிமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித் தன. மத்திய, மாநில ஆளும்கட்சி களான பாரதிய ஜனதாவோ, அதிமுகவோ இந்த சம்பவத்தை வார்த்தைக்குகூட கண்டிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இதுதவிர பெரும்பாலான தொழில், வர்த்தகத் துறை அமைப்புகள் தொழிற்சாலை தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டிக் காமல் மௌனம் சாதித்தன. ஒரு சில உற்பத்தியாளர் சங்கங்கள் மட்டுமே இந்துமுன்னணியின் பெயரைக் குறிப்பிடாமல் இந்த வன்முறைக்கு கண்டனம் தெரிவித்தன. தொழிற்சங் கங்கள் தரப்பில் கடும் கண்டனம் தெரி விக்கப்பட்டது! இந்து முன்னணியின் வன்முறை வெறியாட்டத்தை எதிர்த்து எதிர்க்கட் சிகள் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறி வித்தன. ஆனால் வன்முறை கும்பலை முழுமையாக கைது செய்து சட்டப்படி தண்டிப்பதற்கு வேகம் காட்டாத காவல் துறை, எதிர்க்கட்சிகளின் ஜன நாயக அடிப்படையிலான ஆர்ப் பாட்ட அறப்போராட்டத்திற்கு மட்டும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையைக் கார ணம் காட்டி உடனடியாக அனுமதி மறுத்தது. 

சூழ்ச்சி மிகுந்த உள்நோக்கம்

எதிர்க்கட்சிகளின் போராட்ட அறி விப்பைத் தொடர்ந்து, இந்து முன்னணி யும் தொழிலைப் பாதுகாக்க, இப்போ ராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித் தது வியப்பாகவும், விநோதமாகவும் இருந்தது. வன்முறையை அரங்கேற் றிய அமைப்பே வன்முறை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதாகச் சொன்னது சூழ்ச்சிகரமான உள்நோக் கம் கொண்டதாகும். ஒருபுறம், தன் மீது படிந்துள்ள அழிக்க முடியாத வன்முறை ரத்தக் கறையைக் கழு வுவதற்கும், மறுபுறம், எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினால் அதில் புகுந்து சீர்குலைவை ஏற்படுத்து வோம் என  குறிப்பாக உணர்த்துவ தற்கும் என, முரண்பட்ட இரண்டு நோக்கங்களுடன் இந்து முன்னணி இந்த அறிவிப்பைச் செய்தது. அதற் கேற்ப காவல் துறையும் எதிர்க்கட்சி கள் போராட்டத்துக்கு அனுமதி மறுத் தது. இது சட்டப்படி கடமையாற்ற வேண்டிய காவல்துறை, யாருடைய நலனுக்கு ஏற்பச் செயல்படுகிறது என்ற சந்தேக கேள்வியை எழுப்பு கிறது. ஜனநாயகத்தில் பொதுவாக உடன்பட்ட விஷயங்களில் அரசியல் கட்சிகளோ, அமைப்புகளோ, கூட்ட ணியோ சேர்ந்து பிரச்சாரம், இயக்கம், போராட்டம் நடத்துவது வழக்கம். அதற்கு எதிரான அமைப்புகள் மக்களி டம் தங்கள் கருத்தைச் சொல்வ தற்கோ, மறுப்பதற்கோ விரும்பினால் தனியாக இயக்கம் நடத்தலாம். ஆனால் யாரை எதிர்த்து போராட்டம் நடத்தப்படுகிறதோ, அதில் அவர்களே பங்கேற்போம் என்று சொல்வது ஜன நாயகமல்ல, அராஜகம்!

அராஜக எதிர்வினைகள்

ஏனென்றால் அவர்கள் ஜனநாயக ரீதியான கருத்து, கொள்கைப் போராட் டத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் கிடை யாது. அவர்கள் கருத்துகளை யார் எதிர்த்து விமர்சித்தாலும் அவர்களால் சகிக்க முடியாது. கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி பிரதமர் மோடி திருப்பூ ருக்கு வந்தபோது அவர் தமிழகத்தை புறக்கணிப்பதாக மதிமுக சார்பில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது. அந்த போராட்டத்தை தடுப் போம் என அங்கே வந்து எதிர்த்து வன்முறை நிகழ்த்தியது இந்து முன் னணி. பெரியாரிய அமைப்புகள் ஆலோசனைக் கூட்டம் நடத்திய போது அங்கேயே சென்று வன்முறை கூச்சல் எழுப்பி சீர்குலைவைச் செய் தது இதே இந்து முன்னணியும், பாஜகவும்தான்! திருப்பூர் கரட்டாங் காட்டில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க வந்த தி.க. தலைவர் கி.வீரமணியின் மீது தாக்குதல் நடத்தும் நோக்கோடு அவர் வந்த வாகனத்தின் மீது கல் வீசி கலவ ரத்தை தூண்ட முற்பட்டதும் இதே இந்து முன்னணிதான்!  அவர்களின் கருத்தை விமர்சித் தாலே சகித்துக் கொள்ள முடியாத இந்து முன்னணிக்கு, கையும், களவு மாக சிசிடிவி கேமிராவில் சிக்கிய அவர்களது வன்முறை வெறியாட் டத்தை அம்பலப்படுத்தி கண்டன இயக்கம் நடத்தினால் பொறுத்துக் கொள்ள முடியுமா? எனவேதான் குய்யோ, முறையோ என கூப்பாடு போடுகிறார்கள்! ஆனால் அவர்களது கடந்த கால, நிகழ் கால வன்முறை வர லாறே அவர்களின் நடத்தைக்குச் சான்றாக உள்ளன.

வன்முறை வரலாறு

கடந்த காலத்தில் காசிபாளையம் பகுதியில் இந்து முன்னணியைச் சேர்ந்த சமூக விரோதிகள் அவர்களுக் குள்ளேயே கும்பல் தாக்குதல் நடத்தி இருவர் படுகொலை செய்யப்பட்ட னர். அண்மையில் பெருந்தொழுவில் எலக்ட்ரீஷியனை அடித்து கொன்ற தாக இந்து முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு  செய்யப்பட்டது. அருள்புரத்தில் பேன்ஸி கடையை தாக்கி சூறை யாடியதாக இந்து முன்னணியைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுபோல் பல விபரங்களை பட்டியலிட முடியும். கட்டப்பஞ்சாயத்து, வசூல் வேட்டை, பங்கு பிரிப்பது தகராறு, மதுபானக் குடித் தகராறு போன்ற பிரச்சனைக ளில் வன்முறை, அடிதடி, வெட்டு, குத்து, கொலையில் தொடர்புள்ள பலர்  அதில் உள்ளனர். இந்து முன்னணிக்கு கழிசடைப் பிரிவில் இருந்துதான் பிரதானமாக ஆட்கள் சேர்கிறார்கள், சேர்க்கப்படுகிறார்கள் என்பதுதான் இதற்கு காரணம். அதேசமயம் விநாய கர் சதுர்த்தி, திருவிளக்கு பூஜை, யாகம் போன்ற இவர்களது மதம் சார்ந்த நடவடிக்கைகளை நம்பி, இந்து மத, ஆன்மீக நம்பிக்கை உள்ள ஒரு பிரிவி னர்  இவர்களது அரசியலைப் புரிந்து கொள்ளாமல் இந்து முன்னணியில் சேர்ந்துள்ளனர், ஆதரவளிக்கின்றனர் என்பதும் உண்மை. ஆனால் பனியன் கம்பெனியில் 60 பேர் நுழைந்து வன்முறை வெறியாட் டம் நிகழ்த்திய சம்பவம் அவர்களது வழக்கமான வன்முறை வரலாற்றுடன் மட்டும் தொடர்பு கொண்டதல்ல. இது திருப்பூருக்குப் புதியது மட்டுமல்ல, ஆபத்தின் அறிகுறியாகும். 

தனிப்பட்ட சிறு சம்பவமா?
ஏதோ ஓரிடத்தில் நடந்த சிறு சம்ப வத்தை ஊதிப் பெரிதுபடுத்துகிறார் கள் என இந்து முன்னணி தலைவர் அங் கலாய்க்கிறார்.  இது உண்மையி லேயே சிறு சம்பவம் தானா? பட்டப் பகலில் விநாயகர் சிலை வாகனத்து டன் 60 பேர் கும்பல் சுமார் 450 பேர் வேலை செய்யும் ஒரு நிறுவனத்துக் குள் எவ்வித தயக்கமும் இல்லாமல் புகுந்து, கம்பெனியையும், அங்கிருக் கும் தொழிலாளர்களையும் அடித்து நொறுக்குகிறார்கள் என்பது சாதாரண விசயம்தானா? எது அந்த கும்பலை இவ்வாறு செய்வதற்கு தூண்டியது? எந்த தைரியத்தில் அவர்கள் இத்த கைய வன்முறையை அரங்கேற்றி னர்?  வெறியூட்டப்பட்ட ஒரு கூட்டம் எந்த சட்ட நியாயங்களுக்கும் உட்படா மல் தாங்கள் நினைப்பதே சரி, தங்க ளுக்கு ஆதரவளிக்காதவர்கள், உதவா தவர்கள், மறுப்புத் தெரிவிப்பவர்கள் யாராக இருந்தாலும் தாக்கப்படுவார் கள், எதிர்விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்பதே அவர்கள் விடுக் கும் செய்தி! இது பொதுச் சமூகத்தில் அச்சத்தை விதைக்கும் கும்பல் மனப் பான்மையாகும்!

பாசிச மனப்பான்மை

ஒரு பிற்போக்கான கருத்தியலுக்கு ஆட்படுத் தப்பட்ட கூட்டம் எவ்வித ஜனநாயக நடைமுறை களையோ, கருத்து சுதந்தி ரத்தையோ மதிக்காமல், சமூகத்தை அச்சுறுத்துவ தன் மூலம் தங்கள் எண் ணத்தை நிறைவேற்றிக் கொள்ள முயலும். இது தான் இந்துத்துவ மத வெறி கும்பல்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைமுறைப்படுத் தும் உத்தி! பசுப் பாது காப்பு என்ற பெயரில் பசு குண்டர்கள் கும்பலாகச் சேர்ந்து சிறுபான்மையின ரையும், தலித் மக்களையும் குறி வைத்து படுகொலை செய்வது, பெண்களைக் கூட்டுப் பாலியல் வல்லு றவு செய்வது, கூட்டுத் தாக்குதல் நடத்துவது என்பது இந்த கும்பல் மனப்பான்மை காரண மாகத்தான்! இதுதான் திருப்பூரில் பனியன் கம் பெனி, தொழிலாளர் தாக்கு தலிலும் நடைபெற்றிருக் கிறது. ஆகவே இது சட்டம் ஒழுங்கு சார்ந்த தனித்த சிறு பிரச்சனை மட்டுமல்ல. பசு குண்டர்கள் கொலை நிகழ்த்துவதும், பணம் தராத பனியன் கம்பெனியை ஒரு கும்பலாகச் சேர்ந்து தாக்கு வதும் வெவ்வேறு சம்பவங் கள் அல்ல, பாசிச சித்தாந்தப் பிடியில் இருப்போரின் அடிப் படையான செயல்முறையே இது தான்! சிசிடிவி கேமிராவில் இந்த காட்சிகள் அகப்படாமல், இவர்களது வன்முறை வெளி உலகுக்குத் தெரியா மல் போயிருந்தால் இந்து முன்னணி இதை வேறு விதமாக திசை திருப்பி தங்களுக்கு எந்த சம்பந்த மும் இல்லை என்று சாதித்திருப் பார்கள். இந்த கும்பல் மனப்பான் மையை வளரவிடுவது ஜனநாய கத்துக்கு கடும் அச்சுறுத்தல் ஆகும். உடனடியாக அதை எதிர்த்து தடுத்து நிறுத்துவது ஜனநாயக சக்தி களின் கடமை ஆகும்.  எனவே நடந்து முடிந்த சிறு  சம்பவமாக இதைப் பார்ப்பது ஆபத்தின் அறிகுறியை உண ராத நிலை ஆகும். எதிர்காலத்தில் இந்த பிற்போக்கு பாசிசவெறி பிடித்த கும்பல் மனப்பான்மை தலை தூக்கா மல் தடுக்கவும், திருப்பூரையும், இங் குள்ள தொழிலையும், தொழிலாளர் களையும், மக்கள் ஒற்றுமையையும் பாதுகாப்பதற்குப் போராட வேண்டி யது காலத்தின் கட்டாயம். திருப்பூர் மக்கள் ஒன்றுபட்டு இந்த பாசிச வெறிபிடித்த கும்பல் மனப்பான் மையை முறியடிப்போம்!! இதற்காகத்தான் செப்.17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக திமுக, மார்க்சிஸ்ட், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இணைந்து இந்து முன்னணியின் அராஜகத்தை எதிர்த்து திருப்பூரின் அரணாக நின்று ஆர்ப்பாட்டத்தை நடத்த அறைகூவல் விடுத்துள்ளன. இதில் எல்லா வேறுபாடுகளையும் கடந்து ஜனநாயக எண்ணம் கொண்ட அனைத்துத் தரப்பினரும் கரம்கோர்ப் பது திருப்பூர் தொழில், தொழிலாளர் வாழ்வை, ஜனநாயகத்தைப் பாது காக்க பேருதவியாக இருக்கும். (ந.நி.)