tamilnadu

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்கிடுக சிஐடியு கோரிக்கை

பொள்ளாச்சி, மார்ச் 25- வால்பாறை  தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 144 தடை உத்தரவு காலத்தில்  ஊதியத்துடன் விடுமுறை  வழங்கிட சிஐடியு  கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழி லாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கத்தின் (சிஐடியு) கோவை மாவட்டச் செயலாளர் பி,பரமசிவம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வால்பாறை பகுதி யில் அரசு (டான் டீ)  மற்றும்  தனியார் தேயிலைத் தோட்டங் கள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. இதில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத் தொழி லாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுபடுத்தும் நடவடிக்கையாக மார்ச் 24 ஆம் தேதி முதல் ஏப்.14 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதனால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் கள் பொருளாதார ரீதியாக மிகப் பெரிய  அளவிலான பாதிப் பினை எதிர்கொள்ளக்கூடும். எனவே, வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழி லாளர்கள் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கான உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட் கள் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், 144 தடை உத்தரவு  காலத்திற்கான ஊதி யம் வழங்கிட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நட வடிக்கை மேற்கொண்டு உறுதிப்படுத்த வேண்டும் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

;