tamilnadu

img

வழக்கறிஞர் சம்சுதீன் காலமானார்

சிபிஎம் தலைவர்கள் அஞ்சலி

இராமநாதபுரம், ஜூன் 2- மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் இராமநாதபுரம் மாவட் டக்குழு முன்னாள் உறுப்பினர் வழக்கறி ஞர் எம் சம்சுதீன் திங்க ளன்று காலமானார். வழக்கறிஞர் சம்சு தீன் 1980-ஆண்டுகளில் கட்சி பணிகளை தொடங்கி தாலுகா குழஉறுப்பினர், மாவட் டக்குழு உறுப்பினர் பொறுப்புகளை வகித்துள்ளார். இராமநாதபுர மாவட்ட மீன்பிடி சங்க ஸ்தாபகத் தலைவர்களில சம்சுதீன் முக்கியமானவர். அன்னாரது மறைவுச் செய்தியறிந்து கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.காசிநாததுரை, மாவட்டச் செயற்குழ உறுப்பினர்கள் என். கலையரசன், எம்.சிவாஜி, ஆர் குரு வேல், எம்ராஜகுமார், இகண்ணகி, தாலுகா செயலாளர் பி.செல்வராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் என்.வெங்கடேஷ், வான் தமிழ் இளம்பரிதி, பரமக்குடி மூத்த தோழர் பாலு, இராம நாதபுரம் வாசு, பூமிநாதன், ஜிடி ராஜூ, எஸ்.ரவி ஆகியோர் அன்னாரது உட லுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர். வழக்கறிஞர்கள் முது குளத்தூர் சந்திரசேகரன், விக்கிரமன் மற்றும் தனபால் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.