கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சாப்பாடு சரியில்லை: சிகிச்சை பெறுபவர்கள் அதிருப்தி
கும்பகோணம், ஆக.28- தஞ்சை மாவட்டம் கும்ப கோணம் பகுதியில் கொரோ னா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் கும்ப கோணம் அருகே உள்ள தனி யார் கல்லூரியில் தங்க வை க்கப்பட்டு தனிமைப்ப டுத்தப்பட்டு வருகின்றனர். இதில் நூற்றுக்கணக்கான அரசியல் தலைவர்கள், பொ துமக்கள், தொற்று ஏற்பட்ட வர்கள் என தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு அரசு அறிவித்த சத்தான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க கூடிய உணவுகள் ஏதும் வழங்கப்படவில்லை என்று அதிருப்தி தெரிவிக்கின்ற னர். இந்நிலையில் அரசியல் தலைவர்கள் மற்றும் பொ துமக்கள் தங்கியிருக்கும் மையத்தில் இதுபோன்று அதிருப்தி ஏற்படுத்தும் வகை யில் உணவுகள் வழங்க ப்படுவதாக குற்றம் சாட்ட ப்படுகிறது. சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம், சுகாதார நிர்வாகம் நேரில் ஆய்வு செய்து நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவுகளை வழங்க வேண்டும் என கோ ரிக்கை எழுந்து வருகிறது.
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க கோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மன்னார்குடி, ஆக.28- அகில இந்திய தொலை த்தொடர்பு ஊழியர் சங்க அகில இந்திய மையத்தின் அறைகூவலின்படி பிஎஸ்எ ன்எல் 18 மாத காலமாக ஊதியம் வழங்கப்படாமல் இருக்கிற ஒப்பந்த ஊழியர்க ளுக்கு உடனடியாக ஊதிய த்தை வழங்கிட வேண்டும். ஆட்குறைப்பு நடவடிக்கை, பொதுத்துறை நிறுவ னங்களை தனியாருக்கு தாரை வார்த்தல் போன்ற நட வடிக்கைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரி க்கைகளை வலியுறுத்தி மன்னார்குடி தொலைபேசி அலுவலகம் முன்பு தர்ணா நடைபெற்றது. தொலைதொடர்பு ஊழி யர் சங்கங்கள் இணைந்து நடத்திய தர்ணாவில் சி.சே கர், கே.மணிகண்டன் தலை மை வகித்தனர். முன்னாள் மாவட்ட துணை தலைவர் எம்.முகமதுயாசின் தர்ணா வை துவக்கி வைத்து உரை யாற்றினார்.
குறுங்காட்டில் மரக்கன்றுகள் நடும் விழா
தஞ்சாவூர். ஆக.28- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பெரியகு ளத்தின் நடுப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குறு ங்காட்டில், பேராவூரணி லய ன்ஸ் சங்கம் மற்றும் கடைம டைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் இணை ந்து நடத்திய மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பேராவூரணி பெரிய குளத்தின் நடுப்பகுதியில், கடந்த ஆண்டு இளை ஞர்களால் தூர்வாரப்பட்ட போது, அமைக்கப்பட்டுள்ள குறுங்காட்டில், ரூ.10 ஆயி ரம் மதிப்புள்ள 250-க்கும் மேற்பட்ட வேம்பு, மா, பலா, ஆல், புங்கை, ஈட்டி, சொர்க்கம், வாகை ஆகிய மரக்கன்றுகள் நடப்பட்டன. லயன்ஸ் சங்கத் தலைவர் பொறியாளர் கோவிதரன் தலைமை வகித்து, மரக்க ன்றுகளை நட்டு விழாவைத் தொடங்கி வைத்தார். மேலும் குறுங்காட்டை சுற்றிலும் பசுமை வேலியும் அமைக்கப்பட்டது.
மனு கொடுக்கும் போராட்டம்
திருச்சிராப்பள்ளி, ஆக.28- திருச்சி திருப்பராய்த்துறையில் சிவன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் குடியிருக்கும் மக்களுக்கு கடந்த 13 ஆண்டுகளாக எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை. கோவில் இடத்தில் நியாய மான அடிமனை வாடகை நிர்ணயம் செய்து ரசீது வழங்க க்கோரி பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் சிவன் கோவில் செயல் அதிகாரி அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போரா ட்டத்துக்கு ஊராட்சி தலைவர் பிரகாசமூர்த்தி தலைமை வகித்தார். தவிச ஒருங்கிணைப்பாளர் வினோத்மணி, மாவட்ட அமைப்பாளர் கே.சி.பாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பின்னர் கோரிக்கை மனுவை கோவில் செயல் அதிகாரி ஹேமாவதியிடம் கொடுத்தனர்.
வறுமையை பயன்படுத்தி பெண்களுக்கு பாலியல் தொல்லை-கடத்தல் மரவாடி உரிமையாளர் மீது புகார்
தரங்கம்பாடி, ஆக.28- மயிலாடுதுறையில் உள்ள மரவாடி ஒன்றில் வேலை செய்து வந்த இளம்பெண் ஒருவரை மரவாடி உரிமையாளர் தொடர் பாலியல் தொந்தரவு அளித்து கடத்தி சென்று விட்டதாக அப்பெண்ணின் பெற்றோர் டிஎஸ்பியிடம் புகார் அளித்துள்ளனர். மயிலாடுதுறை பல்லவராயன்பேட்டையில் உள்ள மரவாடியில் வேலை செய்து வந்த வைத்தீஸ்வரன் கோவிலை சேர்ந்த இளம்பெண் ஒருவரை மரவாடியின் உரிமையாளர் தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து கடத்தி சென்றுவிட்டதாக சந்தேகப்படுவதாக மயிலாடுதுறை துணைக் காவல் கண்காணிப்பாளரிடம் அப்பெண்ணின் பெற்றோர் ஓரிரு நாட்களுக்கு முன்பு புகார் அளித்தனர். மயிலாடுதுறை பகுதியில் உள்ள ஒரு சில தனியார் ஹோட்டல் மற்றும் மரவாடிகளில் பணியாற்றும் பெண்களை அவர்களின் வறுமையை பயன்படுத்தி சிலர் பாலியல் தொல்லை தருவதாக பரவலாக பேசப்படுவதாகவும், மாவட்ட காவல்துறை உரிய கண்காணிப்பை மேற்கொண்டு பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
நாகையில் பசுமைத் துறைமுகம் அமையுமா?
நாகப்பட்டினம், ஆக.28- தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழ னிச்சாமி, நாகப்பட்டினத்திற்கு வியாழக்கி ழமை பிற்பகல், மாவட்ட ஆட்சியரின் அலுவ லகத்திற்கு வருகை தந்து, நாகை மாவட்ட த்தில் கொரோனா நோய்த் தொற்றுத் தடு ப்புப் பணிகள் மற்றும் மாவட்டத் திட்ட வள ர்ச்சிப் பணிகள் பற்றி அதிகாரிகள், வல்லுநர்க ளுடன் ஆய்வு நடத்தினார். பல்வேறு துறைகளின் சார்பில், ரூ.207.56 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிக ளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். ரூ.43. 60 கோடி மதிப்பிலான நிறைவுபெற்ற 13 திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார். 19 பய னாளிகளுக்கு ரூ.1.91 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், கொ ரோனா காலத்தில் நீட் தேர்வு நடத்தக் கூடாது என்பதே தமிழக அரசின் முடிவு. இதனை வலியுறுத்திப் பிரதமருக்குக் கடிதம் எழு தப்பட்டுள்ளது. 10-ஆம் வகுப்புத் தனித் தேர்வர்கள் நிலை அறிவிக்கப்படாமல் இரு ப்பதற்குக் காரணம், அவர்கள் தேர்வு எழு தாததே. நாகை மாவட்டத்தில் கூட்டுக் குடி நீர்த் திட்டத்தின் கீழ், குடிநீர்ப் பற்றாக்குறை விரைவில் போக்கப்படும். நாகையில் பசுமைத் துறைமுகம் அமையும் என்று மறை ந்த முதல்வர் ஜெயலலிதா முன்னர் அறி வித்திருந்தார். இதற்காகத் தனியார் நிறு வனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. யாரும் முன்வரவில்லை. இத்திட்டத்தைச் செயற்படுத்த தனியார் நிறுவனங்கள் முன்வ ந்தால், நாகையில் பசுமைத் துறைமுகம் அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஜவுளித்துறை மைச்சர் ஓ.எஸ். மணியன், மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர், மாவட்டக் காவல் கண்காணிப்பா ளர் செ.செல்வரெத்தினம், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
தஞ்சாவூர், ஆக.28- தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முது கலைப் பட்டப் படிப்பில் சேருவ தற்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலைத் தமிழ்ப் பாடத்துக்கான கலந்தாய்வு செப்.3 (வியாழக்கிழமை) காலை 10 மணி க்கும், முதுகலை வரலாறு பாடத்து க்கான கலந்தாய்வு செப்.4 (வெள்ளி க்கிழமை) காலை 10 மணிக்கும் நடை பெறும். கலந்தாய்வில் கலந்து கொள்ள தகுதியான விண்ணப்பதா ரர்களுக்கு மின்னஞ்சல் வழியாக தக வல் தெரிவிக்கப்படும். மேலும், விவ ரங்களுக்கு www.tamiluniversity. ac.in என்ற இணையதளத்தில் காணலாம் என பல்கலைக்கழக பதி வாளர் (பொ) முனைவர் கு.சின்ன ப்பன் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறப்பட்டுள்ளது.
கருவிகள் வழங்கல்
சீர்காழி, ஆக.28- மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தில் நூறு நாள் திட்ட பணியா ளர்கள் மற்றும் தூய்மை பணி யாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழுத் தலை வர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்து 42 ஊராட்சி மன்ற தலைவர்க ளுக்கும், நூறு நாள் திட்ட பணிக்கு தேவையான உபகரணங்களையும் தூய்மைப் பணியாளர்களுக்கு கொ ரோனா வைரஸ் தடுப்பு உபகரணங்க ளையும் வழங்கி துவக்கி வைத்தார்.
கடனுக்காக வீட்டை ஏலம் விடுவதாக தனியார் வங்கி அதிகாரிகள் மிரட்டல்
தஞ்சாவூர் அருகே இளைஞர் தீக்குளிப்பு; மார்க்சிஸ்ட் கட்சி ஆறுதல்
தஞ்சாவூர், ஆக.28- தஞ்சாவூர் அருகே வாங்கிய கட னுக்காக வீட்டை ஏலம் விடப் போவ தாக அதிகாரிகள் மிரட்டியதால், இளைஞர் தீக்குளித்து உடல் கருகிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் அருகே வல்லம் வள்ள லார் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த் (40) வெல்டராக வேலை செய்து வந்தார். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த ஆண்டு வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய ஆனந்த் கொரோனா கார ணமாக, மறுபடியும் வெளிநாடு செல்லவில்லை. இவர் வல்லத்தில் உள்ள தனியார் வங்கியான கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கியில், ரூ.9 லட்சம் வீட்டுக்கடன் வாங்கியிருந்தார். இது வரை ரூ.13 லட்சம் செலுத்திய நிலை யில், மேலும் ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் செலுத்த வேண்டும் என தனியார் வங்கி தரப்பில் ஆனந்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து வியாழக்கிழமை மாலை, தனியார் வங்கிக்கு சென்ற ஆனந்த் வங்கி மேலாளரை சந்தி த்து பேசியுள்ளார். குறிப்பிட்ட தொ கையை செலுத்துவதாக தெரிவித்து ள்ளார். அப்போது முழு பாக்கித் தொ கையை உடனே செலுத்தாவிட்டால், ஆக.28 (வெள்ளிக்கிழமை) காலை, வீட்டை ஏலத்தில் விடுவதாக வங்கி மேலாளர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், வீடு பறிபோய் விடுமோ என மனவேதனை அடைந்த நிலை யில், வங்கியை விட்டு வெளியேறிய ஆனந்த் மண்ணெண்ணெய்யை ஊற்றி தனக்குத் தானே தீ வைத்து கொண்டார். இதில் உடல் முழுவ தும் தீப்பற்றி எரிந்த நிலையில், அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து, அவரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் அனுமதித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலை யில் ஆனந்த் சிகிச்சை பெற்று வரு கிறார். ஆனந்துக்கு ஹேமா (34) என்ற மனைவியும், அவினாஷ்(8), சாய் சர்வேஷ்(4) என்ற இரு மகன்களும் உள்ளனர். இந்நிலையில், சிகிச்சை பெற்று வரும் ஆனந்தை சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், நிர்வாகி கள் மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் ஆர்.மனோகரன், பி.செந்தி ல்குமார், என்.வி.கண்ணன், எம்.மாலதி, எஸ்.தமிழ்ச்செல்வி மற்றும் நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறி அவரது உறவினர்களி டம் நடந்த சம்பவம் குறித்து கேட்ட றிந்தனர். பின்னர் சிபிஎம் மாவட்டச் செயலா ளர் கோ.நீலமேகம் தெரிவிக்கையில், “ஆனந்த் தற்கொலை முயற்சிக்கு காரணமான கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கி அதிகாரிகள் மீது, கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். ஆனந்த் பெற்ற கடனைத் தள்ளு படி செய்ய வேண்டும். உடல் நலன் தேறி வந்தாலும், வேலை செய்ய முடி யாத நிலையில் உள்ள ஆனந்தின் குடு ம்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். அவரது பிள்ளைகள் படிப்புச் செலவு, எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உரிய நிவா ரணம் வழங்க வேண்டும். 90 சதவீ தம் தீக்காயம் அடைந்து, உயிருக்கு போராடி வரும், ஆனந்துக்கு உயர் சிகிச்சை வழங்க வேண்டும். இடத்தை ஏலம் வாங்க வரும் நபர்களுடன், வங்கி அலுவலர்கள் கூட்டுச் சேர்ந்து, அவர்களுக்கு இடம் ஏலத்தில் எடுக்க கடன் வழங்கியும், இடத்தின் விலை மதிப்பை குறைத்து, உரிமையாளர்க ளுக்கு நட்டத்தையும், ஏலம் எடுப்ப வர்கள் பயனடையும் வகையிலும் செயல்படும் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.