tamilnadu

img

குமாரபாளையம்: கந்துவட்டி கொடுமையால் விசைத்தறி தொழிலாளி தற்கொலை

நாமக்கல், செப். 26- குமாரபாளையம் அருகே மைக்ரோ பைனான்ஸ் என்ற கந்துவட்டி கும்பலின் மிரட்டல் காரணமாக விசைத்தறி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர்  விசைத்தறி தொழிலாளி ராஜூ. இவரது மனைவி விசா லாட்சி. இவர் மகளிர் சுய உதவிக் குழுவின் மூலம் குமாரபாளையத்தில் இயங்கி வரும் மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். இந்த கடனுக்கு 30 சதவிகித வட்டி வசூலிக்கப்பட்டு வந்த நிலை யில் கடந்த சில மாதங்களாக கடன் தொகை யை கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் ராஜூ மற்றும் அவரது மனை வியை தரக்குறைவாக பேசி தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளான  ராஜூ வியாழனன்று தற்கொலை செய்து  கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியின ரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. இதற்கிடையே, ராஜூவின் தற் கொலைக்கு காரணமான மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி ராஜூவின் உடல் வைக்கப்பட்டிருந்த குமாரபாளையம் அரசு மருத்துவமனையின் முன்பு அனைத்து கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்செங்கோடு காவல் துணை  கண்காணிப்பாளர் சண்முகம், தற் கொலைக்கு தூண்டிய நிதி நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறா மல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.  முன்னதாக, கடந்த 31.7.2019 ஆம் தேதி யன்று குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த  வேணு கோபால் என்பவரது மனைவி  மைக்ரோ பைனான்ஸ்  நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். ஆனால் கடனை திருப்பி  செலுத்த முடியாததால் வேணுகோபால்  மற்றும் அவரது மனைவி, தாயார், மகன் உட்பட நான்கு பேர் விஷம் அருந்தி தற் கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதில் வேணுகோபாலின் தாயார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல், கடந்த செப்.19 ஆம் தேதி யன்று குமாரபாளையம் உடையார் பேட்டை பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரின் மனைவியான மல்லிகா, மைக்ரோ  பைனான்ஸ் மூலம் கடன் பெற்றார். ஆனால், குறிப்பிட்ட காலத்தில் கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாததால் நிதி நிறுவன ஊழியர்கள் மற்றும் மகளிர் குழுவை சேர்ந்த பெண்கள் அவர்களை மிரட்டியுள்ளனர். இத னால் அவமானம் தாங்க முடியாமல் சண் முகசுந்தரம் தற்கொலை செய்து கொண் டார். இவ்வாறு குமாரபாளையத்தில் மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரில் கந்து வட்டி வசூலிக்கும் நிதி நிறுவனங்களால் மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் மற்றும் அவரது கணவர்கள் தற்கொலை முயற்சி யில் ஈடுபடுவது இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

இதற்கிடையே, மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரில் நடைபெறும் கந்துவட்டி கும்பலின் கொள்ளைக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நாமக்கல் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை யில் தெரிவித்துள்ளதாவது, கந்துவட்டி கொடுமையால் உயிரிழந்த விசைத்தறி தொழிலாளியின் குடும்பத்திற்கு உரிய  நஷ்டஈடு வழங்க வேண்டும். குமாரபாளை யம் மற்றும் பள்ளிபாளையம் உள்ளிட்ட நாமக்கல் மாவட்டம் முழுவதும் நடைபெறும்  கந்துவட்டி கொடுமைகளைத் தடுத்திடும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் செயல்பட வேண்டும். விசைத்தறி தொழிலாளியின் மரணத்திற்கு காரணமான கந்து வட்டி வசூல் செய்து வரும் கும்பலை கைது செய்ய வேண்டும் என அந்த  அறிக் கையில் தெரிவித்துள்ளார்.


 

;