tamilnadu

கோபி மற்றும் ஈரோடு முக்கிய செய்திகள்

கோபி கலை கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா மாணவர்கள் கொண்டாட்டம்

கோபி, ஜன. 13- கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடி பாளையத்தில் செயல்பட்டு வரும் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அனைத்து மாணவ, மாணவிகளும் பொங்கல் பண்டிகையை கொண் டாடி மகிழ்ந்தனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையத்தில் செயல்பட்டு வரும் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியில் மாணவ மாணவிகள் அனைவரும் கல்லூரி நிர்வாகத்துடன் ஒன்றிணைந்து பொங்கல் விழாவை வெகு சிறப்பாக கொண்டாடினர். கல்லூரி வளாகத்தில் ஒவ்வொரு துறையின் சார்பில் அந்ததந்த துறை மாணவ மாணவிகள் தனித்தனியாக பொங்கல் வைத்தனர். கல்லூரி நிர்வாகம் சார்பில் பெரிய அளவிலான மண் பானையில் சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது. அதன் பின்னர் மாணவ, மாண விகளின் கும்மிபாட்டு கரகாட்டம் உள்ளிட்ட பல் வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.  இப்பொங்கல் விழாவிற்கு அனைத்து மாண வர்களும் பாரம்பரிய உடையில் வருகை தந்து விழாவை சிறப்பித்தனர். மேலும் கல்லூரி விளை யாட்டுத்திடலில் பழங்காலத்து நாணயங்கள் முன்னோர்கள் பயன்படுத்திய அரிவாள், அம்மி, உலக்கை உள்ளிட்ட பழங்காலபொருட்கள் காட் சிப்படுத்தப்பட்டிருந்து அனைவரையும் கவர்ந்தது.

இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

ஈரோடு, ஜன. 13- இந்திய ரிசர்வ் வங்கியில் 926 உதவியா ளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் வர வேற்கப்படுவதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறி வித்துள்ளார்.  இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிர வன் தெரிவித்துள்ளதாவது, இந்திய ரிசர்வ் வங் கியில் 926 உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறவுள்ளது. இத் தேர்வு இரண்டு கட்டமாக நடைபெறும். முதற்கட்டத் தேர்வு பிப்ரவரி 14 மற்றும் 15 ஆம் தேதி நடைபெறும். இரண்டாம் கட்ட தேர்வு மார்ச் மாதம் நடைபெறும். இத்தேர்விற்கு இணையதளம் மூலம் ஜனவரி 16 வியாழன் வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு www.rbi.org.in என்ற  இணையத் தளம் மூலம் அறிந்துகொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சாலையோரம் சடலம் புதைக்கும் அவலம்

தனி மயானம் அமைத்துத் தர  கிராம மக்கள் கோரிக்கை

ஈரோடு, ஜன. 13- ஈரோடு அஞ்சல் கோட்ட மக்கள் குறைகேட்பு கூட்டம் (ஜன.20) திங்களன்று நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக அஞ்சலக கண்காணிப்பாளர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,  ஈரோடு அஞ்சல் கோட்ட வாடிக்கையாளர் குறைக்கேட்புக் கூட்டம் ஜன.20 ஆம் தேதி மதியம் 12 மணியளவில் முது நிலை அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  நடைபெறவுள்ளது. இதற்கான புகார் மனுக்களை  ஜன.14 ஆம் தேதிக்குள், முதுநிலை அஞ்சலக கண் காணிப்பாளர், ஈரோடு கோட்டம்,  ஈரோடு- 638 001’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் ஈரோடு,  காந்திஜி சாலையில் உள்ள முதுநிலை அஞ்சல் கண் காணிப்பாளர் அலுவலகத்தில், நேரில் மனுக்களை கொடுக்க வழங்கலாம் எனவும் மனுவில்  ‘குறை கேட்பு  நாள் மனு’  என குறிப்பிட வேண்டும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

வரதட்சணை கொடுமை

பல்லடம் அருகே பருவாய் கிராமத்தை சேர்ந்த யுகா ஷினி (21), கணவர் கலையரசனுடன் கடந்த மூன்றாண்டு களுக்கு முன்பு திருமணமாகி, ஒரு பெண் குழந்தை உள் ளது. இந்நிலையில் இவரது மாமியார் ருக்குமணி, வரதட்ச ணைக் கேட்டு தொடர்ந்து நச்சரித்து தொல்லை தந்து வரு வதாக குற்றஞ்சாட்டினார். ஏற்கனவே கணவருக்கு அர சாங்க வேலைவாங்குவதாக ஒன்றரை லட்சம் கேட்டார். அதன்பின்னர் கடன் இருந்தததற்காக நகைகளை கேட்டு வாங்கினார். தற்போது மகனுடன் சேர்ந்து வாழ வேண்டு மென்றால், ரூ.2 லட்சம் கேட்டு அடித்து, துன்புறுத்துகிறார். இது தொடர்பாக போலீஸாரிடம் புகார் அளித்தபோதும் அவர்கள் இதனை கண்டுகொள்ளவில்லை. ஆகவே வர தட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தும் மாமியார் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 
அஞ்சல் குறைகேட்பு கூட்டம்

;