tamilnadu

கோபி மற்றும் அவிநாசி முக்கிய செய்திகள்

கோபியில் 64 நாட்களுக்கு பிறகு ஒரு சிறப்பு பேருந்து இயக்கம்

கோபி, மே 27- கோபிசெட்டிபாளையத்திலிருந்து, திருப்பூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பணிக்கு செல்லும் அரசு ஊழியர்களுக்காக ஒரு சிறப்பு பேருந்து இயக்கப்பட்டது.  கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 64 நாட்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பொதுபோக்குவரத்துகள் முற்றிலும் தடை செய்யப்பட்டது. கடந்த மே 15 ஆம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வு அளிக்கப்பட்டது. அதில்,  அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் குறைந்த எண்ணிக்கையில் பணியாளர்களை கொண்டு செயல்படலாம் என அரசு அனுமதிய ளித்திருந்தது. ஆனால் பேருந்து, ரயில் உள்ளிட்ட பொதுபோக்குவரத்துக்கு தொடர்ந்து  தடைவிதித்து வந்த நிலையில் அரசு பணியாளர்கள் அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் திருப் பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கோபி செட்டிபாளையம், நம்பியூர், சேவூர் மற்றும் அவிநாசி  பகுதியிலிருந்து ஏராளமானோர் செல்வதால் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் அரசு பணியா ளர்கள் பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்  என கோரிக்கைவைத்தனர். அதன் அடிப்ப டையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் கோபி செட்டிபாளையத்திலிருந்து திருப்பூருக்கு சிறப்பு பேருந்து இயக்க அனுமதியளித்துள்ளார்.

கள்ளச் சாராயம் விற்றவர் கைது

அவிநாசி, மே 27 - பயணிகள் ஆட்டோவில் கள்ளச்சாராயம் விற்ற வர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவிநாசியை அருகே ராயர்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரங்கன் என்பவரது மகன் வேணுகோபால் (29), அதே பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி என்பவரிடமிருந்து 10  லிட்டர் கேனில்  கள்ளச் சாராயம் வாங்கி அதை பயணிகள் ஆட்டோ வில் வைத்து சில்லறை விற்பனை செய்து வருவதாக அவிநாசி மதுவிலக்கு காவல்துறையினருக்கு ரகசிய  தகவல் வந்தது.  இதையடுத்து, அவிநாசி மது விலக்கு  காவல் ஆய்வாளர் ஹேமா தலைமையில் மதுவி லக்கு காவல்துறையினர் தீவிர வாகன சோதனை யில் ஈடுபட்டனர். இந்நிலையில், அவிநாசியை அடுத்துள்ள சேயூர் அருகே வேணுகோபால் ஓட்டி  வந்த பயணிகள் ஆட்டோவை நிறுத்தி சோதனை யிட்ட போது ஆட்டோவில் 6 லிட்டர் கள்ளச்சா ராயம் கேனில் இருப்பது தெரியவந்தது. இதை யடுத்து 6 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் பயணி கள் ஆட்டோவை பறிமுதல் செய்து வேணுகோ பாலை அவிநாசி மதுவிலக்கு காவல்துறையினர் கைது செய்தனர்.

சூரிய சக்தியால் இயங்கும்  சூரிய மின்வேலி அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

திருப்பூர், மே 27- திருப்பூர்  மாவட்டத்தில்  சூரிய சக்தி யால் இயங்கும்  சூரிய ஒளி  மின்வேலி அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில்  தனிநபர்  விவசாயிகளுக்கு விவசாய உற்பத்தியை பாதிக்காத வண்ணமும்,  விளைபொருட்களின் மூலமாக கிடைக்கும்  வருவாயை பெருக்கிடும்  நோக்கத்துடனும்  சூரிய சக்தியால்  இயங்கும்  சூரிய ஒளி மின்வேலியினை ரூ.3 கோடி  மானியத்துடன்  தேசிய  வேளாண் அபிவிருத்தித் திட்டம்  2020-21ம் நிதியாண்டில் வேளாண்மை  பொறியியல் துறை மூலம் செயல்ப டுத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த சூரிய ஒளி மின்வேலி அமைப்பானது சூரிய ஒளி மின் தகடுகள் மூலம்  கிடைக்கும் மின்சா ரத்தினால்  இயங்க கூடியது . சூரிய ஒளி மின்வேலி அமைப்பதனால்  விலங்குகள், வேட்டைக்காரர்கள் மற்றும் அன்னியர்களுக்கு  மின் வேலியில் செலுத்தப்படும்  உயர்மின் அழுத்தத்துடன் கூடிய  குறுகிய  உந்து விசை மின் அதிர்ச்சியினால்  அசௌகரியம் ஏற்பட்டு விளை பொருட்களின் உற்பத்தி பாதிக்கப் படாமலும் அதன் மூலம்  கிடைக்கும் வருவாய் இழப்பில்லாமலும்  விவசாயிகளுக்கு  கிடைத்திட வகை  செய்யும். ஒரு விவசாயிக்கு அதிக பட்சம் 2 ஹெக்டேர் பரப்பு அல்லது 1245 மீட்டர் சூரிய மின் வேலி அமைக்க மானியம் வழங்கப்படும் . சூரிய மின்வேலி அமைப்பதற்கான  செலவு தொகையில் 50 சதம் அல்லது அதி கபட்சமாக ரூ.2 லட்சத்து 18 ஆயி ரம் மானியம் வழங்கப்படும் . 5 வரி சைகள் கொண்ட சூரிய மின்வேலி அமைக்க ஒரு மீட்டருக்கு  ரூ.250 வீதம் 7 வரிசைக்கு ரூ.350. 10 வரி சைக்கு ரூ.450. விவசாயிகள் தங்கள் பகுதிக்கு ஏற்றவாறு தெரிவு செய்து கொள்ளலாம்.  எனவே, இந்த திட்டத்தில்  பயன் பெற விருப்பமுள்ள விவசாயிகள்  திருப்பூர் பல்லடம் ரோடு,  தென்னம் பாளையத்தில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை, உதவிசெயற்பொ றியாளர் (வேபொ) அலுவலகத்திலும் ( கைபேசி எண் : 86680 37109 ).  தாராபுரம் துணை காவல் கண்காணிப் ்பாளர் அலுவலகம் எதிரில் உள்ள  உதவிசெயற்பொறியாளர் (வேபொ) அலுவலகத்திலும் (கைபேசி எண்: 99427 03222 ), உடுமலைபேட்டை யசோதா ராமலிங்கம் லேஅவுட், உதவிசெயற்பொறியாளர்(வேபொ) (கைபேசி எண்: 87786 81070) அலுவலகத்திலும் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

;