tamilnadu

img

படியூர் பள்ளியில் மழலையர் வகுப்பு

அங்கீகாரம் வழங்க பெற்றோர் கோரிக்கை

திருப்பூர், ஜன. 27 -  திருப்பூர் மாவட்டம், காங்க யம் வட்டம், படியூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனர்.  அந்த மனுவில் அவர்கள் கூறியி ருப்பதாவது, படியூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. படியூர், ரெங்கம்பாளையம், கணபதி பாளையம் மற்றும் ஒட்டப்பாளை யம் ஆகிய பகுதிகளை சேர்ந்த குழந் தைகள் ஏராளமானோர் இப்பள்ளி யில் படித்து வருகின்றனர். நாங்கள் அனைவரும் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறோம். ஆனால் எங்களால் செலவு செய்து,  குழந்தைகளை படிக்க வைக்க முடி யாததால் தான் தற்போது அரசுப் பள்ளியில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி குழந்தைகளை படிக்க வைக்கி றோம். இங்கு பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினரால் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளில் 46 குழந்தை கள் பயின்று வருகிறார்கள். ஆனால் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப் புக்கான அங்கீகாரம் இன்னும் தரப் படவில்லை. பெற்றோர் ஆசிரி யர் சங்கத்தினர் மூலம், தொடர்ந்து எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்பு களை நடத்த தனியாக இரண்டு ஆசி ரியர்கள், ஒரு பெண் உதவியாள ரும் நியமித்து அவர்களுக்கான சம்பளமும் அளிக்கப்படுகிறது.  இப்பள்ளியில் தேசிய பெண் குழந்தை தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டு, குழந்தை களுக்கு பரிசுகளும் வழங்கப்பட் டன. ஆகவே அரசும், கல்வித்துறை யும் இரண்டு வகுப்புகளையும் அங்கீகரிக்க வேண்டும். இது  தொடர்பாக கல்வித்துறை அலுவ லர்களிடம் மனுகொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.  வரும் கல்வியாண்டு முதல், எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப் புகளை அரசு அங்கீகரித்து குழந்தை களுக்கு தேவைப்படும் ஆசிரியர் கள், போதிய கல்வி உபகரணங்கள், குழந்தைகளுக்கு தேவையான சீருடைகள் உள்ளிட்டவற்றை வழங்கி பெற்றோரின் சுமையை தீர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

;