1930களில் கோவையில் பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கான சங்கம் அமைத்து உரிமைக ளுக்கான போராட்டங்களில் தலைமையேற்று சொல் லொன்னா அடக்குமுறை களை சந்தித்தவர் கே.ரமணி. தனது துவக்க கால தொழிற் சங்க பணிகளின்போது காந்தியின் காங்கிரஸ் இயக் கத்தின்பால் ஈர்க்கப்பட்ட கே.ரமணி, கதர் நுற்பது. ஆங்கி லேயர் துணிகளை பகிர் ஷிப்பது போன்ற சத்தியா கிரகப் போராட்டங்களில் ஈடுபட்டார். குஜராத் மாநிலம் தண்டியில் காந்தி உப்பு சத்தியாகிரக போராட்டத்தை துவங்கிய போது, கோவையில் காங்கிரஸ் தொண்டர்களுடன் சேர்ந்து வாளாங்குளத்தில் உப்பு காய்ச்சும் போராட்டத்தை நடத்தி கைதா கினார். கள்ளுக்கடைக்கு எதிரான மறியலிலும் பங்கேற்று சிறை சென்றார். தொழிற்சங்கத்தில் அங்கம் வகிக்கும் தொழிலாளர்களை தேச விடுதலைப் போராட்டக் களத்திலும் ஈடுபடுத்தியதுடன், மகாத்மா காந்தி கோவைக்கு வருகை தந்தபோது அவரது பொதுக்கூட்டத்தில் கே.ரமணி கலந்து கொண்டார். இவ்வாறு தொழிலாளர்களின் மத்தியில் புகழ்பெற்ற தலைவராக உயர்ந்த கே.ரமணி, பின்னர் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் பிரச்சாரத்திலும், ஜீவாவின் சோசலிச கருத்துக்களாலும் கவரப்பட்டு சோசலிசவாதியாக உயர்த்திக் கொண்டார்.
1842ல் தேசம் ழுமுவதும் எழுந்த ஒத்துழையாமை இயக்கப் போராட்டம் கோவையிலும் எழுச்சியுடன் நடந்தது. இதன்ஒருபகுதியாக, கோவையில் பிரிட்டீஸாருக்கு வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் கவிழ்ப்பு, சூலூர் விமான நிலையம் தீ வைப்பு போன்ற சம்ப வங்கள் அரங்கேறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அச்சமயம், கம்யூனிஸ்ட் இயக்கத்தின்பால் தன்னை இணைத்துக் கொண்ட கே.ரமணி இப்போராட்டங்களில் பங்கேற்காவிடினும், இதையொட்டி கைது செய்யப்பட்ட தொழிலாளர்களுக்காக குரல் கொடுத்தார். இத னால் ஆத்திரமடைந்த ஆங்கிலேய அரசு கே.ரமணி மற்றும் கிஷன் ஆகியோர் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தனர். இதேபோன்று மற்றொரு வழக்கில் பெல்லாரியில் கொடும் சிறை வாசத்திற்கும் கே.ரமணி உள்ளானார். அதேநேரம், தேச விடுதலைப் போராட்டம் என்ற ஒற்றை முழக் கத்துடன் மட்டும் நில்லாமல், உள்ளூர் மற்றும் ஆங்கிலேய முதலாளி களின் சுரண்டலுக்கு எதிராகவும் தொழிலாளர்களை ஒன்று திரட்டி நியாயமான கோரிக்கைகளுக்காக சங்கம் அமைத்தும் போராடினர். இவ்வாறு சுதந்திரப் போராட்டத்தையும் தாண்டி தொழிலாளர்களை வர்க்க சுரண்டலுக்கு எதிராக திரட்டி உரிமைகளுக்காக போராடி வெற்றி கண்ட போராளியான கே.ரமணி பல்லாயிரக்கணக்கான உழைப் பாளிகளின் இதயங்களில் இடம் பெற்றார். நாடு விடுதலைக்கு பின்னர் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினராக எளிய மக்களின் பிரதிநிதியாக செயலாற்றினார். இறுதிக்காலம் வரையிலும் உழைக் கும் மக்களின் நலனுக்காக தன்னை அர்ப்பணித்து கொண்டவர் தோழர் கே.ரமணி.