கோவை, செப்.25- செப்.27 ஆம் தேதியன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், கூட்டணி கட்சிகள், வழக்கறிஞர்களுடன் ஆலோ சித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக சட்ட மன்ற உறுப்பினரும், மாநகர் மாவட்ட பொறுப்பாளருமான நா.கார்த்திக் தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சியின் அநி யாய சொத்துவரி உயர்வு, சூயஸ் நிறுவனத்திற்கு குடிநீர் விநியோ கத்தை தாரைவார்த்தது ஆகிய வற்றை கண்டித்து செப். 27 ஆம் தேதியன்று திமுக தலைமையி லான கூட்டணி கட்சிகள் சார்பில் கோவையில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இப்போராட் டத்திற்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் தொழில் அமைப்புகள், வியாபாரிகள், வணிகர்கள் ஆதர வளித்திருந்தனர். இந்நிலையில் இப்போராட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித் துள்ளது. இதுகுறித்து திமுக மாநகர் மாவட்ட பொறுப்பாளரும், சிங் காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நா.கார்த்திக் செய்தியாளர்களிடம் பேசுகை யில், கோவை மாநகராட்சி நிர் வாகம் வரி சீராய்வு என்ற பெயரில் சொத்து வரி உயர்வு மற்றும் குடிநீர் இணைப்புக்கு மீண்டும் வரி வசூல் செய்கின்றனர். மேலும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் நிறுவனத்துடன் 26 ஆண்டுகளுக்கு குடிநீர் விநி யோகம் செய்ய ஒப்பந்தம் போடப் பட்டுள்ளது. இவற்றை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முழு அடைப்பு போராட் டம் நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது நீதி மன்றம் முழு அடைப்பு போராட்டத்திற்கு தடை விதித்துள்ளது. நீதிமன்ற அறிவிப்புக்கு பின் னர் கடைகளை மூட சொல்லி கேட்க மாட்டோம். சட்ட விதிக ளுக்கு உட்பட்டு செயல்படு வோம். மேலும், இந்த பிரச்ச னையை கையாள்வது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினி டம் அறிவுரை பெற்று சட்டரீதி யாக இதை எதிர் கொண்டு செயல்படுவோம். மக்கள் கடை களை தாங்களாக மூடினால் அதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது. அதேவேளையில் நீதி மன்ற உத்திரவு கிடைத்த பின்பு அது குறித்து கூட்டணி கட்சிகள், வழக்கறிஞர்களுடன் ஆலோ சித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித் தார்.