tamilnadu

img

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையங்கள் ஆய்வு

நாமக்கல்,டிச.17- நாமக்கல் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்பு களுக்கான வேட்புமனு பரிசீ லினை பணிகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங் கள் அமைக்கப்பட்டு வரும்  பணிகளை தேர்தல் பார்வை யாளர் டி.ஜகந்நாதன் ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தல் பணிகள்  தீவிரமடைந்துள்ளன. இதன்ஒருபகுதியாக வேட்புமனு பரிசீலினை பணிகள் மற்றும்  வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக் கப்பட்டு வருகிறது. இப்பணிகளை தேர்தல் பார்வையாளர் டி.ஜகந்நாதன் செவ்வாயன்று  ஆய்வு செய்தார். முதலாவதாக பரமத்தி ஊராட்சி ஒன்றியம் பிள்ளைகளத்தூர் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை பணிகளை தேர்தல் பார்வையாளர் டி.ஜகந்நாதன் ஆய்வு  செய்தார்.  இதைத்தொடர்ந்து, பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மாவட்ட ஊராட்சி  வார்டு உறுப்பினர், ஒன்றிய குழு வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர் பதவி களுக்கான வேட்புமனு பரிசீலினை பணி களில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி  தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளதை நேரில் ஆய்வுசெய்தார்.  மேலும், பரமத்தி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் பரமத்தி ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்பு களுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டு வரும் பணியினையும், வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரியில் கபிலர் மலை ஊராட்சி ஒன்றியத்திற்குபட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டு வரும் பணியினையும், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் மகளிர் கல்லூரியில் நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்குபட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டு வரும் பணியினையும் ஆய்வுசெய்தார். இந்த வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்குப்பெட்டிகள் வைப்பதற்கான பாது காப்பு அறையினை பார்வையிட்டு, ஊரக  உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில்  பதிவான வாக்குப்பெட்டிகள் அனைத்தையும் வைக்க போதுமான இடவசதி உள்ளதா என்று  அளவீடு செய்து உறுதி செய்தார்.         தேர்தலில் பதிவான வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக வைப்பதற்கான உறுதியான அறை வாக்கு எண்ணும் அறை, மாவட்ட ஊராட்சி வார்டுகள், ஊராட்சி ஒன்றிய வார்டு கள், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி  வார்டுகள் ஆகியவற்றிற்கான வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வருவதற்கான தனித்தனியான பாதை அமைப்பு, பாது காப்பு வசதிகள் உள்ளிட்ட வசதிகள், குடிநீர்  மற்றும் கழிப்பிட வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின்போது, துணை காவல் கண்காணிப்பாளர் அ.பழனிசாமி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மற்றும் உதவி தேர்தல் நடத்தும்  அலுவலர்கள், அரசு அலுவலர்கள் ஆகி யோர் கலந்து கொண்டனர்.