tamilnadu

img

ரேசன் கடைகளில் அரசு முதன்மைச் செயலர் ஆய்வு

நாமக்கல், செப்.13-  திருச்செங்கோட்டில் உள்ள ரேசன் கடைகளில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு முதன்மை செயலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.  நாமக்கல் மாவட்டத்தில் ரேசன் கடைகளில் பொது  மக்களுக்கு பொருட்கள்  முறையாக விநியோகிக்க படுகிறதா? என கூட்டுறவு  உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மை செயலர் தயானந்த கட்டாரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திருச்செங்கோடு டிஎம்எஸ் சார்பில் இயங்கும் ரேசன் கடை களில் அவர் பார்வையிட்டு ஆய்வு  மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது  பொருட்கள் முறையாக விநியோகிக்கப் படுகிறதா? பொருட்கள்  சரியாக  உள்ளதா?  என ஆய்வு செய்தார்.  இதைத்தொடர்ந்து திருச்செங் கோட்டை அடுத்த விட்டம்பாளையத்தில் உள்ள தொடக்க வேளாண்மை ரேசன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். இந்த  ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம், டிஎம்எஸ் மேலாண்மை  இயக்குனர் ரவிக்குமார் மற்றும் கூட்டு றவுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.  இதைத்தொடர்ந்து நாமக்கல் மாவட் டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ்  மேற்கொள்ளப்படும் பணிகளை  கூட்டுறவு  உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு  துறை அரசு முதன்மை செயலாளர்  நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச் சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி  உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  

;