tamilnadu

img

பருவமழையால் வீடுகள் இடிந்து விழும் நிலை புதிய வீடுகள் கட்டித்தர பழங்குடியின மக்கள் கோரிக்கை

பொள்ளாச்சி, ஆக. 9 -  பொள்ளாச்சியில், பருவமழை காரண மாக பழங்குடியின மக்கள் வசிக்கும் வீட்டின் சுவர்கள் முழுவதும் ஈரப்பதத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் புதிய வீடுகள் கட்டித்தர வேண்டுமென அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள னர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த வேட்டைக்காரன்புதூர் அருகே அண்ணா நகரில் 50 க்கும் மேற்பட்ட பழங் குடியினக் குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தொடர் மழைப் பருவத்தில் இம்மக்கள் வசிக் கின்ற தொகுப்பு வீடுகளில் பெரும் சேதம் ஏற்படுகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கனமழை பெய்து வருவதால் இப்பகுதியில் வசிக்கின்ற மக்களின் வீடு கள் சிதலம் அடைந்து மழைநீர் வடிந்து வருவ தோடு வீட்டைச் சுற்றியும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வீட்டின் சுவர்கள் முழுவ தும் ஈரப்பதத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ளது.  ஆகவே, இப்பகுதியினை வருவாய்த் துறையினர் பார்வையிட்டு ஆய்வு செய்து பாதுகாப்பான முகாம்களில் இப்பகுதி மலை வாழ் மக்களைத் தங்க வைக்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்ய வேண்டும். ஆபத்தான இடியும் நிலையில் உள்ள வீடுகளை முற்றி லும் அகற்றி புதியதாக தொகுப்பு வீடுகள் கட் டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் தமி ழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

;