சென்னை:
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இதுவரை 41 விழுக்காடு குறைவாக பெய்துள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் நிர்வாகத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்து உள்ளார்.சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்," ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவ மழை தமிழகத்தில் இதுவரை 203 மில்லி மீட்டர் பெய்துள்ளது. இது சராசரி அளவை விட 41 சதவீதம் குறைவு" என்றார்.நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டத்தில் 609 மி. மீட்ட
ரும், பந்தலூர் வட்டத்தில் 177 மி. மீட்டரும், குந்தா வட்டத்தில் 741 மி. மீட்டரும் மழை பதிவாகிவுள்ளது.பலத்த மழையால் கூடலூர் வட்டம் அத்திப்பாளி, புத்தூர் வயல் ஆகிய இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அத்திப்பாளியில் 103 பேரும் புத்தூர் வயலில் 124 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப் பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.