tamilnadu

img

டாஸ்மாக் ஊழியர்களை இஎஸ்ஐ திட்டத்தில் இணைத்திடுக

டாஸ்மாக் ஊழியர் சங்க மாநாடு வலியுறுத்தல்

ஈரோடு,ஜன 31- ஈரோடு மாவட்டம் சிஐடியு அலுவலகத்தில் டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் 14 ஆவது மாநாடு வெள்ளியன்று நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு சங்கத்தின் தலைவர் என்.முருகையா தலைமை வகித்தார். துணைத்தலைவர் பி.அர்த்தனாரீஸ்வரன் வரவேற்பு ரையாற்றினார். சங்கத்தின் மாநி லப் பொதுச்செயலாளர் க.திருச் செல்வன் மாநாட்டை துவக்கி பேசி னார். பொதுச்செயலாளர் வை. பாண்டியன் அறிக்கை சமர்ப் பித்து பேசினார். சிஐடியு மாவட்ட தலைவர் சுப்பிரமணி யன், செயலாளர் எச்.ஸ்ரீராம், சங்கத் தின் பொருளாளர் வி.ராஜேந்திரன், மாவட்ட நிர்வாகிகள் பொன்.பா ரதி, கே.சுப்பிரமணி, எம்.வெங்க டேசன் உட்பட திரளானோர் பங் கேற்றனர். இம்மாநாட்டில்,டாஸ்மாக் ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தில் இருந்து விலகி இஎஸ்ஐ  திட்டத்தில் இணைக்க வேண்டும். தகுதித்தேர்வில் தேர்ச்சி அடைந்த வர்களுக்கு இளநிலை உதவியாளர் பணி நியமனம் வழங்க வேண்டும். நீதிமன்ற தடையை எதிர்கொண்டு  பொதுப்பணி இட மாறுதல் அமல் படுத்த வேண்டும். டாஸ்மாக் கடைகளில் காலியாகும் அட்டைப் பெட்டிகளுக்கு விலையை குறைத்து உடனடியாக ஏலம் விட வேண்டும், நீதிமன்ற தீர்ப்புகளை மேல்முறையீடு செய்யாமல் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. இதனைத்தொடர்ந்து மாநாட் டில், டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவராக என்.முரு கையா, பொதுச்செயலாளர் வை. பாண்டியன், பொருளாளராக கே.என்.ரவிச்சந்திரன் உள் ளிட்ட 27 நிர்வாகக்குழு உறுப் பினர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

;