tamilnadu

img

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சாத்தனூர் அணை திறப்பு

திருவண்ணாமலை, ஜன. 10- சாத்தனூர் அணையில் இருந்து பாச னத்திற்காக 35 நாட்களுக்கு தண்ணீர் திறந்து  விடப்படும் என்று பொதுப்பணித் துறை அதி காரிகள் விவசாயிகளிடம் தெரிவித்துள்ளனர். சாத்தனூர் அணையில் இருந்து விவசா யத்துக்கு தண்ணீர் திறப்பது தொடர்பான  கருத்துக்கேட்புக் கூட்டம் திருவண்ணா மலையை அடுத்த வாணாபுரத்தில் நடை பெற்றது. கூட்டத்திற்கு பொதுப்பணித் துறை யின் உதவி செயற்பொறியாளர் அறிவழகன் தலைமை வகித்தார். சாத்தனுார் அணை பாசன விவசாயிகள் சங்க திட்டக் குழுத் தலைவர் ஜெயராமன், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், இந்தாண்டு சாத்தனூர் அணையில் இருந்து கூடுதல் நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும். திறந்து விடப்படும் தண்ணீர் சரி யான முறையில் கடைமடை வரை செல்ல நட வடிக்கை எடுக்க வேண்டும். தூர்ந்துபோன கால்வாய்களை சீரமைத்து தண்ணீர் வீணா காமல் ஏரிகளுக்குச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து பேசிய பொதுப்பணித் துறை அதிகாரிகள் சாத்தனூர் அணையில் குறைந்த அளவே தண்ணீர் இருப்பதால் 35 நாட்களுக்கு மட்டுமே தண்ணீரைத் திறந்துவிட முடியும். இதை விவசாயிகள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.

;