tamilnadu

img

அரசு பள்ளிகளில் இலவச நாப்கின் திட்டத்தை முறையாக செயல்படுத்திடுக

கோவை மாவட்ட மாணவிகள் மாநாடு வலியுறுத்தல்

கோவை, மார்ச் 3- அரசு பள்ளி வளாகத்தில் இலவச நாப்கின் திட்டத்தை முறையாக செயல் படுத்திட வேண்டுமென கோவை மாவட்ட மாணவிகள் மாநாடு வலியு றுத்தியுள்ளது. இந்திய மாணவர் சங்கத்தின் மாணவிகள் மாவட்ட மாநாடு செவ்வா யன்று கோவை காட்டூரிலுள்ள மில் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு கயல்விழி தலைமை தாங்கினார். இந்திய மாணவர் சங் கத்தின் மாநில துணைத் தலைவர் ஆர்.பிரகாஷ் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். மாணவி கள் உபகுழு மாநில கன்வீனர் காவ்யா, மாணவர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் தீபக்சந்திரகாந்த் ஆகி யோர் வாழ்த்தி உரையாற்றினார்.  இம்மாநாட்டில், பெண்கள் மீதான வன்முறையை தடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரி வளாகங்களில் நாப் கின் எரியூட்டு இயந்திரத்தை உறுதிப் படுத்த வேண்டும். அரசு பள்ளிகளில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த இலவச நாப்கின் திட்டத்தை முறை யாக செயல்படுத்திட வேண்டும். பாலின சமத்துவத்தை நிலைநாட்ட  வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.  இதைத்தொடர்ந்து உபகுழுவின் மாவட்ட கன்வீனராக கயல்விழி மற்றும் 13 பேர் கொண்ட மாவட்ட உபகுழு தேர்வு செய்யப்பட்டது. முடி வில், மாணவர் சங்க மாவட்டத் தலை வர் அசார் நன்றி கூறினார். இம் மாநாட்டில் ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர்.

;