tamilnadu

img

அதிக பனிப்பொழிவால் தேயிலை மகசூல் பாதிப்பு

விவசாயிகள் வேதனை

நீலகிரி, ஜன.17- நீலகிரி மாவட்டத்தில் அதிக பனிப்பொழிவு காரண மாக தேயிலைச் செடிகளை நோய் தாக்கி மகசூல் பாதிக் கப்பட்டதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.   நீலகிரி மாவட்டத்தில் உறைபனி தீவிரமாகி வருகிறது.  குடியிருப்பு பகுதிகளில் உள்ள பாசன குழாய்களில் தண்ணீர் உறைந்து பனிக்கட்டியானதால் தண்ணீர் வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தேயிலை, மலர்ச்செடி மற்றும் காய்கறிச்செடிகளை அதிக பனி படர்ந்து  நோய் தாக்கி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு  வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கொப்புள நோய் தாக்கி தேயிலை செடிகளின் கொழுந்துகள், இலைகள் சுருண்டு நிறம் மாறி வருகின்றன. இதனால் பச்சை தேயிலை மகசூல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை கட்டுப்படுத்த மானிய விலையில் அரசு மருந்து வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

;