tamilnadu

img

ஈரோட்டில் கடைவீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

ஈரோடு, அக். 20- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈரோடு கடைவீதிகளில் கடும் போக்குவ ரத்து நெரிசல் ஏற்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈரோட்டில் ஜவுளிக் கடைகளில் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. ஈரோடு பிரப் சாலை, நேதாஜி சாலை, பன்னீா்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு உள்ளிட்ட இடங் களில் சாலையோர ஜவுளிக் கடைகளும் புதிதாக வந்துள்ளன. தீபாவளி பண்டி கைக்கு ஒரு வாரமே இருப்பதால் பொது மக்கள் ஜவுளி வாங்க அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா். மேலும், கடைவீதிகளில் ஜவுளிகளின் விற்பனை களைகட்டத் தொடங்கி உள்ளது. பொதுமக்களின் கூட் டம் அலைமோதத் தொடங்கி இருப்ப தாலும் போக்குவரத்து நெரிசல் அதிக மாகக் காணப்பட்டது. குறிப்பாக, ஈரோடு ஆா்.கே.வி.சாலை, மணிக்கூண்டு, நேதாஜி சாலை ஆகிய இடங்களில் வாகனங்கள் ஊா்ந்து சென்றன. அவ்வழியாக வழக்கம்போல பேருந்துகள், மினி பேருந்துகள் இயக்கப்பட்டதாலும், லாரிகள் செல்ல அனுமதிக்கப்பட்டதாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட் டது. கடைவீதிகளில் ஜவுளிகள் வாங்க  பொதுமக்களின் கூட்டம் உள்ளதால் கடை வீதிகளில் வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.