tamilnadu

img

நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை

உடுமலை, ஜுலை 22- உடுமலை அமராவதி அணை யின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள 54 ஆயி ரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.  சமீப காலங்க ளில் பருவ மழை ஏமாற்றியதால் கடந்த 6 மாதமாக நீர்வரத்து இல்லா மல் அணை வறண்டு மொத்தமுள்ள 90 அடியில் 25அடிக்குள்ளாகவே நீர்மட்டம் காணப்பட்டது. இந் நிலையில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இத னால் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணைக்கு நீர்வரத்து  படிப்படியாக அதிகரித்து வருகிறது.  கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 97 அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து திங்களன்று காலை வினாடிக்கு 992 கன அடியாக உள் ளது. 90 அடி உயரமுள்ள அணை யின் தற்போதைய நீர்மட்டம் 40.78 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பருவ மழை தீவிரமடைந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள் ளதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி  அடைந்துள்ளனர்.

;