tamilnadu

புத்தாண்டில் போதையில் வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை

சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது 

கோவை, டிச. 30-  புத்தாண்டு கொண்டாட்டத் தின்போது மதுபோதையில் வாக னம் இயக்குபவர்கள் மற்றும் பெண்களிடம் முறைகேடாக நடப் பவர்களை சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணித்து கடும் நடவ டிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 2020 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கோவை மாநகரில்‌ எந்தவித அசம்பாவிதங்கள்‌ நிகழா மலும்‌, பொதுமக்கள்‌ அனைவரும்‌ புத்தாண்டை இனிமையாகவும்‌, மகிழ்ச்சியாகவும்‌ கொண்டாட கோவை மாநகர காவல்துறை சார்பில்‌ மூன்றடுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இதில் முக்கிய மாக முதலாம்‌ தளமாக அவினாசி சாலை, பந்தயசாலை பகுதிகளும்‌, இரண்டாம்‌ தளமாக காந்திபுரம்‌, ஆர்‌.எஸ்‌.புரம்‌ பகுதிகளும்‌ மற்றும்‌ மூன்றாம்‌ தளமாக பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை கண் டறியப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடு கள்‌ அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 31.12.2019 ஆம்‌ தேதி மாலை 6 மணி முதல்‌ 01.01.2020 ஆம்‌ தேதி அதிகாலை 4 மணி வரை மாநகரின்‌ பல்வேறு முக்கிய மான பகுதிகளில்‌ 44 இருசக்கர ரோந்து வாகனமும்‌, 26 நான்கு சக்கர ரோந்து வாகனங்களும்‌, காவல்‌ துணை ஆணையர்கள்‌, காவல்‌ உதவி ஆணையர்கள்‌, 400 மாநகர ஆயுதப்படை காவ லர்கள்‌, 80 சிறப்பு காவல்‌ படை  காவலர்கள்‌, 150 ஊர்‌ காவல்படை யினர்‌ உட்பட மொத்தம்‌ 1500 காவ லர்கள்‌ பாதுகாப்பு பணியில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர்‌. 

இவர்கள்‌ கோவை மாநகரில்‌ உள்ள முக்கிய இடங்களான பேருந்து நிலையங்கள்‌, விமான நிலையம்‌, இரயில் நிலையங்கள்‌, கடைவீதிகள்‌, முக்கிய வழிபாட் டுத்‌ தலங்கள்‌ மற்றும்‌ நகரின் பல முக்கியமான இடங்களிலும் பாது காப்பு பணியில் ஈடுபடுத்தப்பட் டுள்ளனர்‌. அவினாசி சாலையில்‌ மட்டும்‌ முக்கியமான சந்திப்புக ளில்‌ ஒரு காவல்‌ உதவி ஆணைய ரின் தலைமையில்‌ பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளது. புத்தாண்டு கொண்டாட்டட் தின்‌போது அதிவேகமாக இரு சக்கர மற்றும்‌ நான்கு சக்கர வாக னங்களை இயக்குபவர்களால்‌ விபத்துகள்‌ ஏற்பட வாய்ப்புள்ள தால், அவ்வாறு வேகமாக வாக னங்களை ஓட்டி வருபவர்கள்‌, குடிபோதையில்‌ வாகனம்‌ ஓட்டி வருபவர்கள்‌ ஆகியோர்களை NGO-க்கள்‌ உதவியுடன்‌ அவி னாசி சாலை சிக்னல்களிலும்‌, பந்தயசாலையிலும்‌ ஏற்படுத்தப் பட்டுள்ள 25 முக்கியமான வாகன தணிக்கை இடங்கள்‌, 11 வாகன சோதனை சாவடிகளில் நிறுத் தப்பட்டு புத்தாண்டு கொண்டாட் டங்கள்‌ முடிந்தவுடன் பாதுகாப் பாக அனுப்பிவைக்கும்‌ வகையில்‌ தக்க ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டுள் ளது. 

மேற்படி வாகன சோதனை செய்யும்‌ இடங்களில்‌ கூடாரம்‌, தண்ணீர்‌, நாற்காலிகள்‌, P.A. ஒலி அமைப்புகள், மின் விளக்குகள் ஆகியவை அமைக்கப்பட்டிருக் கும். பந்தயசாலை பகுதியில்‌ மட் டும்‌ மதுபோதையில்‌ வாகனம்‌ ஓட்டுபவர்களின்‌ வாகனங்களை தடுத்து நிறுத்துவதற்கு 3 இடங்கள்‌ கண்டறியப்பட்டுள்ளது. அவ் வாறு மதுபோதையில்‌ வரும்‌  வாகன ஓட்டிகள்‌ தடுத்து நிறுத் தப்பட்டு அவ்வாகனங்களின் மீது சட்டப்படியான நடவடிக்கைகள்‌ எடுத்து, நீதிமன்றத்தில்‌ ஆஜர் ‌படுத்தப்பட்டு, நீதிமன்ற நடவ டிக்கைகள்‌ முடித்த பின்னர்‌ அவ் வாகனங்கள்‌ விடுவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அவிநாசி சாலையில்‌ உள்ள மைய தடுப்புச்சுவர்கள்‌ 1) அண்ணா சிலை சந்திப்பு 2) லட்சுமி  மில்‌ சந்திப்பு 3) வி.கே.ரோடு சந் திப்பு, 4) சித்ரா சந்திப்பு ஆகிய 4 இடங்களில்‌ மட்டுமே திறந்து வைக்கப்பட்டிருக்கும்‌. மற்ற இடங் களில்‌ Barricade-ஆல்‌ அடைக் கப்படும். விபத்துகளை தவிர்க்கும்‌ வகையில்‌ மேம்பாலங்களின்‌ நுழைவு மற்றும்‌ வெளியேறும்‌ வழிகள்‌ புத்தாண்டு கொண்டாட் டத்தின்போது தடுப்புகளால்‌ மூட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள்‌ புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மேம்பாலத்தில்‌ செல்வதை தவிர்க்குமாறு‌ கேட்டுக்கொள்ளப் படுகிறது. இதேபோல், நகரின் 4 முக்கிய சாலை சந்திப்புகளில்‌ தீய ணைப்பு வாகனங்கள்‌ நிறுத்தவும்‌ முக்கிய சாலை சந்திப்புகளில்‌ ஆம் புலன்ஸ்‌ வாகனங்கள்‌ நிறுத்தவும்‌ ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டுள்ளது. மேலும்‌ கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்‌ புறக்காவல்‌ நிலையம்‌ மூலம்‌ கூடு தல்‌ பாதுகாப்பு ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளது. இந்த புத்தாண்டு கொண்டாட் டத்தின்போது 1) விபத்துக்களை தடுக்கவும்‌, 2) பெண்களை கேலி செய்வதை தடுக்கவும்‌ 3) குற்றங் களை தடுக்கவும்‌, 4) மது போதை யில்‌ வாகனப்‌ பயணம்‌ செய்வதை தடுக்கவும்‌ காவல்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளது. மேற்படி காவல் துறையி னரின் அறிவுரைகளை ஏற்று பிரச்சனைகள்‌ மற்றும்‌ விபத்து களைத்‌ தவிர்த்து, அசம்பாவிதம்‌ இல்லா புத்தாண்டை கொண்டாட பொதுமக்கள்‌ அனைவரும்‌ ஒத் துழைப்பு தருமாறு கோவை மாந கர காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
 

;