tamilnadu

img

அரசு பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து சிறுமி படுகாயம்

நாமக்கல், ஆக.11- அரசு பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் படுகாய மடைந்து படுத்த படுக்கையாக கிடக்கும் சிறுமிக்கு உரிய சிகிச் சையை உறுதி செய்வதுடன், நிவா ரணமும் வழங்கிட வேண்டும் என சிஐடியு வலியுறுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், எருமப் பட்டி அருகே பொட்டிரெட்டிபட்டி யில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப் பள்ளியில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்ற னர். இப்பள்ளியின் எதிரே உள்ள  தெருவில் வசித்து வருபவர் கட்டுமான தொழிலாளி த.செல்வ வேல். இவரின் இரண்டாவது மகள் காயத்ரி (10) இப்பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஜூலை 4 ஆம் தேதியன்று வழக்கம்போல் பள் ளிக்குச் சென்ற மாணவி காயத்ரி, சிறுநீர் கழிப்பதற்காக தனது பள்ளி தோழி கனிஷ்காவு டன் கழிவறைக்கு  சென்றுள்ள னர். அப்போது, கழிப்பறையின் சுவரும், கதவும் இடிந்து விழுந்த தில் மாணவி காயத்ரிக்கும், கனிஷ் காவுக்கும் பலத்த காயங்கள் ஏற் பட்டது. இவர்களின் அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த பொதுமக்கள் இருவரையும் கடும் போராட்டத்திற்கு பின்னர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்த னர். இதில் மாணவி காயத்ரியின்  வலது கால் உடைந்து படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நாமக்கல் மருத்துவமனை யில் இருந்துமேல் சிகிச்சைக் காக சேலம் மோகன் குமார மங்கலம் அரசு மருத்துவ கல் லூரிக்கு மருத்துவர்கள் பரிந் துரை செய்து, அங்கு மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட் டனர். இங்கு இரண்டு முறை  அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையிலும் தற்போது வரை இம்மாணவி முழுமையாக குண மடையாத சூழலில் இயற்கை உபாதைகள் கழிக்கக்கூட முடி யாமல் வலியால் துடிதுடித்து வரு கிறார்.

சிஐடியு ஆறுதல்
இந்நிலையில், இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு)  மாவட்டத் தலைவர் பி. சிங்காரம், செயலாளர் ந.வேலுசாமி, பொரு ளாளர் ஏ.கே.சந்திரசேகர் ஆகி யோர் தலைமையிலான உண்மை அறியும் குழுவினர் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும், மேற்படி சம்பவம் குறித்த விவரங்களை கேட்டறிந்தனர். இதன்பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், இப்பள்ளியில் தரமில்லாத கட்டிடங்கள் கட்டப்படுவதால் கடந்த 2010 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடம் எட்டு ஆண்டுகளில் இடிந்து விழுந் துள்ளது. இந்நிலையில், மாவட்ட கல்வித் துறை நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத தால் பெற்றோர்களுடன் அப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட் டனர். இதன்பின்னர் பள்ளியின் ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்து பெயரளவிற்கு நடவ டிக்கை எடுத்தனர். மேலும், எரும பட்டி காவல் நிலையத்தில்  10.7.2019 ஆம் தேதியன்று முதல் தகவல் அறிக்கை பதிவு (FlR) செய்தனர். பின்னர் தற்போது வரை இம்மாணவி சுயநினைவு இழந்துள்ள சூழ்நிலையில் அரசு மருத்துவ மனையில் உயர் சிகிச்சைகள் உறுதி செய்ய வேண்டும் . மேலும், நாமக்கல் மாவட்டம் முழுவதும் தனியார் பள்ளிகள் கூடுதலாக உள்ள சூழ்நிலையில் ஏழை, எளிய மாணவர்கள் அரசுப் பள்ளியை நம்பியே பயின்று வருகின்றனர். இந்நிலையில் அரசு பள்ளிகளில் அடிப்படை வசதி களான கழிப்பிட வசதிகள் 90 சதவிகிதமான பள்ளிகளில் முறையாக பராமரிக்கப்படுவ தில்லை. இதேபோல், தேவை யான குடிநீர் வசதி ஏற்படுத்தி தருவது இல்லை. இதனால் பல பள்ளிகளில் மாணவிகள் இயற்கை உபாதைகள் கழிப்பது பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. ஆகவே, தற்போது அரசு பள்ளி வளாகத்திற்குள் தரமில் லாத கட்டிடம் கட்டி பெரும் விபத் துக்கு உட்படுத்திய ஒப்பந்ததா ரரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். தரமில்லாத கட்டி டங்கள் இது போன்ற விபத்துக் கள் ஏற்படும்போது ஒப்பந்த தாரர்கள் மீது அபராதம் விதிக் கப்பட வேண்டும். பள்ளிகளில் அடிப்படை வசதிகள், கட்டிடங் களின் உறுதிதன்மை குறித்து மாவட்ட கல்வித்துறை நிர்வாகம் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும். அரசுப் பள்ளிகளில் கட்டிட கமிட்டிகள், பெற்றோர் ஆசிரியர் கமிட்டிகள் முறையாக மாதாமாதம் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிக்கு உரிய மேல்சிகிச்சைக்கு பரிந் துரை செய்ய வேண்டும். அரசு சார்பில் நிவாரணமும் வழங்க வேண்டும். அஜாக்கிரதையாக செயல்பட்ட ஆசிரியர்கள் மீதும், பள்ளி கல்வித்துறை மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இம்மாண விக்கு நீதி கேட்டு இந்திய தொழிற் சங்க மையம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும் செய்து முடிவு செய்யப்பட்டுள் ளதாக தெரிவித்தனர்.

ஆட்சியர், பள்ளிக்கல்வித்துறை அலுவலத்தில் மனு

இதைத்தொடர்ந்து கட்டு மான தொழிலாளியின் மகளுக்கு பள்ளி நேரத்தில் நடந்த விபத் துக்கு பள்ளிக்கல்வித்துறை பொறுப்பேற்க வேண்டும். மாண விக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அவரின் உடல்நலம் முன்னேற்றம் பெற்றிட உரிய சிகிச்சை அளிக்க பள்ளிக்கல்வித் துறை நிர்வாகம் பொறுப்பேற்று செய்திட வேண்டும். மேலும் ஒப் பந்ததாரர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். அரசு அதிகாரிகள் இப்பிரச்சனையில் அலட்சியப் போக்கில் செயல்படுவது கைவிட வேண்டும் என வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஆட்சியர், பள்ளிக் கல்வித் துறை அலுவ லருக்கு இந்திய தொழிற்சங்க மையத்தின் நாமக்கல் மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி சார் பில் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது.
 

;