சத்துணவு ஊழியர்கள் ஆவேச மறியல் - கைது
கோவை, நவ. 26– சத்துணவு மையங்களை மூடி சத்துணவு திட்டத்தை முடக்கும் தமிழக அரசை கண் டித்து சத்துணவு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர். சத்துணவு மையங்களை மூடும் தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்தும், 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட சத்துணவு திட்டத்தின் மேம்பாட்டிற்கான அறிவிப்பை நடைமுறைப்படுத்த வேண்டும். ஏற்கனவே அரசு வாக்குறுதி கொடுத்தபடி சத்துணவு ஊழியர்களுக்கு பணிநிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்டவை வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும். ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.9 ஆயிரம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்திற்கு தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறை கூவல் விடுத்தது. இதன் ஒருபகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் செவ்வாயன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் சாரதாமணி தலைமையில் நடை பெற்ற இப்போராட்டத்தில் சங்கத்தின் முன்னாள் தலைவர் பழனிச்சாமி முன் னிலை வகித்தார். அரசு ஓய்வூதியர் சங்கத் தின் மாவட்ட செயலாளர் மதன் போராட் டத்தை வாழ்த்தி உரையாற்றினார். இதைய டுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனிச்சாமி, பொருளாளர் சீனிவாச ராகவன் உள்ளிட்ட இருநூறுக்கும் மேற்பட்டோர் கைது செய் யப்பட்டனர்.
உதகை
உதகை ஏடிசி சாலையில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.விஜயா தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கே முருகன், மாவட்ட பொருளாளர் சுஜாதா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.முத்துக்குமார் துவக்கி வைத்து பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஏ .ஆர் .ஆசரா, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட செய லாளர் சலீம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இந்த மறியல் போராட்டத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் இன்ப நாதன், ஜெயசீலி, லில்லி, ஜெயமணி, மணி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று கைதாகினர்.
ஈரோடு
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதி யில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.தனுஷ்கோடி தலைமை வகித் தார். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெ.பாஸ்கர் பாபு போராட்டத்தை துவக்கி வைத்தார். சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.மூர்த்தி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் உஷாராணி, தமிழ் நாடு ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட செய லாளர் என்.மணிபாரதி, தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத் தின் மாவட்ட செயலாளர் எ.ரங்கசாமி, கண் மருத்துவ உதவியாளர் சங்கத்தின் நிர்வாகி ஜி.சுகுமார், தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கத்தின் மாநில செயலாளர் எ.ராஜசேகர், சிஐடியு மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் உள் ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.