tamilnadu

தங்கம் விலை தொடர்ந்து உயர்வு ஆர்டர்கள் குறைந்து வருவதாக தங்கநகை தொழிலாளர்கள் வேதனை

கோவை, ஆக.12- தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதன் விற்பனை சரிந்து ஆர் டர்கள் குறைந்து வாழ்வாதாரம் மிகமோச மாகி வருவதாக தங்கநகை தொழிலாளர் கள் வேதனை தெரிவித்துள்ளனர். தங்கம் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தை பொருத்தவரையில் ஒரு  கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்திற்கு மேல் விற்பனையானது. அதாவது சவரன் ரூ.24 ஆயிரத்து 168க்கு விற்பனையானது. அப் போது முதல் தங்கத்தின் விலை குறைய வில்லை. மாறாக விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தொடர்ந்து, விலை யேற்றத்தால் தங்கத்தின் மீது முதலீடு செய்பவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால், சாமானிய மக்கள் மிகுந்த வருத்த மடைந்துள்ளனர். கோவையை பொருத்த வரையில் ஒருகிராம் ஆபரண தங்கம் ரூ.3 ஆயிரத்து 571க்கு விற்பனையானது. ஒரு சவரன் ரூ.28 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட தங்க நகை தயாரிப்பாளர்கள் கூறுகையில், அமெரிக்க-சீனா வர்த்தக போர், அமெரிக்கா வில் வைப்பு நிதிக்கு வட்டி விகிதம் குறைப்பு  மற்றும் பங்குசந்தை சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து அமெரிக்க டாலர் மதிப்பு குறைகிறது. மேலும், தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை கடந்த பட்ஜெட்டில் 2.5 சதவிகிதம் அதிகரித்தது மத்திய அரசு. இதனால் தங்கம் விலை பவுனுக்கு ரூ.600 வரை அதிகரித்தது. தொடர்ந்து விலை அதிகரித்து வருவதால் வியாபாரம் 60 சத விகிதம் வரை குறைந்துள்ளது. 2.5 டன்  எடை அளவிலான வேலையும் குறைந்து விட்டது என தெரிவித்தனர்.  இதுகுறித்து தங்க நகை தொழிலாளிகள் கூறுகையில், கோவை மாவட்டத்தில் தங்க  பட்டறை தொழிலை நம்பி 1.5 லட்சம் மக்கள்  வாழ்ந்து வருகின்றனர். எங்களுக்கு சத விகித அடிப்படையில் கூலி வழங்கப் படுகிறது. தங்க நகை செய்ய 3 சதவிகிதம் சேதாரம் வழங்கப்பட்டு வந்தது. விலை ஏகிறும் போது எங்களுக்கு 2 சத விகிதம் தான் கூலி வழங்கப்படும். தற் போது தங்கம் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்து வருகிறது. இதனால் கடைகளில் வியாபாரம் குறைந்துவிட்டது. எனவே, விற்பனையாளர்கள் மூலம் எங்களுக்கு ஆர்டர்கள் கொடுப்பது வெகுவாக குறைந்துவிட்டது. வாழ்வா தரம் மிக மோசமாகி வருகிறது. வருடத் தில் 4 மாதங்கள் தொழில் முழுமையாக நலிவடைந்துவிடும் நிலை உள்ளது.  தங்கநகை தொழிலாளர்களின் வாழ்வா தாரத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

;