கோவை, செப். 26– சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் கோரிக்கை மனு முறையீட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். நெடுஞ்சாலை பராமரிப்பு பணி களை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது. சாலைப்பணியாளர்க ளுக்கு ஊதியத்தில் 10 சதவிகிதம் ஆபத்து படி வழங்க வேண்டும். தொழில்நுட்ப கல்வித்திறன் பெற்ற ஊழியர்களுக்கான ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலைப் பணியாளர் கள் கோரிக்கை முறையீட்டு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மண்டல கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் பால சுப்பிரமணியம் தலைமை வகித்தார். இதில், மாநில பொதுச் செயலாளர் அம்சராஜ், கோட்ட செயலாளர் முரு கேசன், அரசு ஊழியர் சங்க நிர் வாகி ரவி, மாவட்ட இணை செயலா ளர் ஜெகநாதன், சின்னமாரி முத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சேலம்
சேலம் மாவட்டம் குரங்குசாவடி பகுதியிலுள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் செந்தில் நாதன், கோட்ட செயலாளர் கலைவாணன் அந்தோணி, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சி.முருக பெரு மாள் மற்றும் சாலை பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.