tamilnadu

img

டாஸ்மாக் கடையில் தீவிபத்து

சத்தியமங்கலம், மார்ச் 20-  சத்தியமங்கலம் பேருந்து  நிலையத்திற்கு பின்புறமுள்ள  டாஸ்மாக் மதுபானக் கடையில் வெள்ளியன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஈரோடு, சத்தியமங்கலம் பேருந்து நிலையத்திற்கு பின்பு றம் இரண்டு டாஸ்மாக் மதுபா னக் கடைகள் இயங்கி வருகி றது. இந்நிலையில் தெற்குப்  பகுதியில் இயங்கிவரும் டாஸ்மாக் கடை யின் முன்பு வைக்கப்பட்டிருந்த அட்டைப் பெட்டிகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது.  இதனைக்கண்ட டாஸ்மாக் ஊழியர்கள்  உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப் புத் துறையினருக்கு தகவல் தெரிவித்த னர். இதனைதொடர்ந்து, சம்பவ இடத்திற்கு  விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கடை முன்பு பற்றி எரிந்த தீயை தண்ணீ ரைக் கொண்டு அணைத்தனர்.  இதன்பின் தகவலறிந்து வந்த காவல் துறையினர் தீ விபத்து பற்றி விசாரணை மேற்கொணடனர். இதில், கடையின் பின்பு றம் உள்ள முட்புதரில் மதுஅருந்த சென்ற  நபர்கள் வைத்த தீ, அருகிலிருந்த டாஸ்மாக்  கடையின் பெட்டிக்கு பரவியது தெரிய வந்தது.  இதுகுறித்து கடை ஊழியர்கள் கூறுகை யில், தீயணைப்புத்துறையினர் விரைந்து  வந்து தீயை அணைத்ததால் டாஸ்மாக் கடை யில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பி லான மதுபாட்டில்கள் தீப்பிடிக்காமல் காப் பாற்றப்பட்டது. அதேநேரம், விபத்தில் எரிந்து சேதமடைந்த அட்டை பெட்டிகளின் மதிப்பு ரூ.10 ஆயிரம் இருக்கும் எனவும் ஊழி யர்கள் தெரிவித்தனர்.