tamilnadu

img

உயர் மின் கோபுரம் அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

அவினாசி, ஜூலை 7- காளம்பாளையம் பகுததியில் விளை நிலத்தில் உயர் மின் கோபுரம் அமைப்பதை எதிர்த்து  விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் ஞாயிறன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் ஒன்றியம் பொங்கு பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆறு இடங்களில் மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு இடம் தேர்வு செய்யப்பட்டு, நான்கு இடங்களில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வரு கிறது. விவசாயிகளின் விளை  நிலத்தில் அவர்களின் அனுமதி யின்றி உள்ளே நுழைந்து தென்னை  மரம், பயிர்கள் போன்றவற்றை ஜேசிபி இயந்திரத்தின் மூலம்  அழித்து மின்கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  இதுதொடர்பான புகாரில் மாவட்ட ஆட்சியரின் விசாரணை முடிவடையாத நிலையில், காவல் துறையை வைத்து விவசாயிகளை அச்சுறுத்துவதையும், விவசாய நிலங்களில் பயிர்களை சேதப் படுத்துவதையும் கண்டித்து பாதிக் கப்பட்ட விவசாயிகள் அரசியல் கட்சியினருடன் இணைந்து ஆர்ப் பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்த னர். ஆனால் இந்த ஆர்ப்பாட்டத் திற்கு காவல்துறை தடை விதித் தது. இருப்பினும் காவல்துறையின் தடையை மீறி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட் டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலாளர் குமார் தலைமை வகித்தார். பொங் குபாளையம்  ஊராட்சியின் முன் னாள் துணைத் தலைவர் அப்பு சாமி, கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சியின் நிர்வாகி செல்வ குமார்  ஆகியோர் கண்டன உரை  ஆற்றினர். இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டனர்.

;