tamilnadu

img

பரிதவிப்பில் இருக்கும் பர்கூர்மலை விவசாயிகள்

“வரவு எட்டணா.! செலவு பத் தணா.! என்ற பழமொழி எங்களுக்கு கச்சிதமாக பொருந்தும்” என்கிறார்கள் அந்தியூர் பர்கூர்மலை விவசாயிகள்.  அந்தியூர் பர்கூர் மலையில் 30க் கும் மேற்பட்ட சிறிய, பெரிய ஊர்கள் இருக்கின்றன. சுமார் இருபத்து ஐந் தாயிரம் ஏக்கர் விவசாய நிலமும், தோராயமாக ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு மலை விவசாயி கள் இருப்பார்கள். நூறாண்டுகளுக்கு முன்பு மலைகளை, பாறைக்கற்களை கொண்ட விவசாய பூமியை தங்களது கடும் உடல் உழைப்பால் சமன்செய்து, பண்படுத்தி விளையும் நிலமாக மாற்றியுள்ளார்கள் இவர்களின் முன்னோர்கள். தங்கள் குடும்பத்தின் பசியை போக்கிக்கொள்ள ராகி, கம்பு, திணை, சாமை, வரகு என பழங்கால தானியங்களை ஆரம்ப காலத்தில் மழையை நம்பி இயற்கை மாறாமல் பயிர்செய்து ஜீவித்துள்ளனர். இப்போது, ராகி விளைச்சல் குறைந்து குடும்பத்தின் உணவுத் தேவை மற்றும் கொஞ்சம் வியாபாரத் துக்காக என்ற அளவிற்கு சுருங்கி விட்டதாக இவர்கள் கூறுகிறார்கள். கம்பு பூட்டைகள் ஆங்காங்கே திக்கா லுக்கு ஒரு நிலத்தில் தலையாட்டுகி றது. திணை வரகு எல்லாம் கருகிவிட் டது. சாமை தேடினால் கிடைக்கும் என்கிறார்கள். உளுந்து, தட்டைப்ப யறு, பச்சைப்பயறு செடிகள் ஒவ் வொரு விவசாயி நிலத்திலும் பசு மையாக ஒரு குட்டை அளவாவது இருக்கிறது. தங்கள் வீட்டு உபயோகம் போக மீதியை கிடைக்கும் விலைக்கு விற்கிறார்கள். புளி, பலா, மா, சீத்தாபழம் மரங்களும் விவசாய பூமி யில் உள்ளன. அவ்வப்போது பருவத் திற்கு தகுந்தாற்போல் இவை கொஞ் சம் கைகொடுக்கும்.

மலை விவசாயிகளுக்கு இயற்கை யாக பெய்யும் பருவ மழைதான் பிர தான பாசன ஏற்பாடு. மற்றபடி சமத ளத்தில் இருப்பது போல் கிணறு, பம்பு செட், போர்வெல் என்பது மிக மிக குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளது. ஆங்காங்கு மழைநீர் கொடிக் கால்கள் ஓடினாலும் அவற்றை தடுத்து தடுப்பணை போன்று கட்டி நிலத்தடி நீரை உயர்த்தும் திட்டம் ஏதும் இங்கு  நிறைவேற்றப்படவில்லை. தற்போது  ஒட்டுமொத்த மலை விவசாயிகளின் வருமான ஆதாரமே குச்சிகிழங்கு விவசாயம்தான். சேகோ ஆலைக ளுக்கு குச்சிக் கிழங்குகளை இவர்கள் உற்பத்தி செய்து கொடுக்கிறார்கள். குச்சிக்கிழங்கு பத்துமாதம் விளைவது. சித்திரை கடைசியில் துண்டு துண் டாக நறுக்கிய குச்சிகளை விவசாய பூமி யில் நட்டு விதைப்பு செய்து மாசியில் குச்சிக்கிழங்கு பிடுங்க ஆரம்பிக் கிறார்கள். இடையில் மார்கழி, தை மாதங்க ளில் வயதானவர்கள் தவிர பெரும்பா லானோர் சமதளத்திற்கு வந்து ஈரோடு,  திருப்பூர், கோவை மாவட்டப் பகுதி யில் ஆங்காங்கே தங்கி இருந்து சோளத் தட்டு அறுக்கும் வேலைசெய்து  குடும்பத்திற்கு வருமானம் ஈட்டுகி றார்கள். இளைஞர்களாக உள்ள வர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபடு கிறார்கள். ஒரு ஏக்கர் விவசாய பூமியில் நல்ல படியாக குச்சி விளைந்தால் ஐந்து டன்  வரையில் குச்சி கிழங்கு கிடைக்கும். ஆனால் அவ்வாறு விளைவதில்லை இரண்டரை முதல் நான்கு டன்னுக்குள் தான் தற்போது குச்சிக்கிழங்கு கிடைக் கிறது என்கிறார்கள்.  “28-புள்ளி அளவு சத்துள்ளது தான்  தரமான குச்சிக்கிழங்கு,  ஆனால் எங்கள் பூமியில் 18 லிருந்து 23 புள்ளி கள் வரை சத்துள்ள குச்சிக்கிழங்கே பெரும்பாலும் கிடைக்கிறது” என்கி றார்கள் பெரும்பாலான மலைவிவசா யிகள். “கிழங்கின் சத்து அளவு 28-புள்ளி கள் இருந்தால் ஒரு டன் ரூ 7500/- வரைக்கூட போகும். எங்கள் கிழங்கு ஒரு டன் ரூ 5000/- வரையில்தான் செல்கிறது, அதனால் ஒரு ஏக்கருக்கு ரூ.10-முதல் ரூ.15-ஆயிரம் வரைதான் வருமானம் கிடைக்கும். சில விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம் கிடைத்தால் அது பெரிது, இது ஒரு வருட விளைச்சலின் வருமானம்” ஒரு  விவசாயி சோகத்துடன் கூறிய வார்த்தைகள் இவை. ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில குச் சிக்கிழங்கு உற்பத்திசெய்ய வேண்டு மானால் மூன்றுமுறை உழவு செய்ய டிராக்டர் வாடகை ரூ.1800/- அதோடு குறைந்தபட்சம் ஐந்து மூட்டை உரம்,  ரூ.5 ஆயிரம் மற்றும் அதைக் கொண்டுவர வண்டி வாடகை 500. மேலும் மூன்றுமுறை களைகள் பிடுங்க 15-நபர்களுக்கு ரூ.3 ஆயிரம் என மொத்தமாக ஒரு ஏக்கருக்கு சுமார் 10500  ரூபாய் வரை உற்பத்தி செலவுகள் ஆகிறது. ஆனால் அதில் கிடைக்கும் வருமானம் ரூபாய் 15  ஆயிரம் தான் எனில் நாங்கள் எப்படி  நல்லபடியாக வாழமுடியும் என்கிறார் கள் விவசாயிகள் தங்கராசு மற்றும் பெருமாள்.

“மேலே சொன்னது குச்சிக்கிழங்கு விளையும் வரையிலான உற்பத்தி செலவு, அதை பிடுங்கி லாரியில் ஏற்றி சோகோ பேக்ட்ரிக்கு கொண்டு போவதுதான் மலைபோன்ற பணி, கிழங்கு பிடுங்க  அதிக கூலியாகும் என்பதால் பக்கத்து பக்கத்து விவசா யிகள் பத்து, பதினைந்து பேர் ஒன்று சேர்ந்து பரஸ்பரம் பேசி ஒவ்வொருவர் பூமியிலும் அனைவரும் சென்று கிழங்கை பிடுங்குவோம், அதே போல  ஒன்று சேர்ந்து லாரியில் ஏற்றி கொண்டு பேக்ட்ரிக்குச் செல்லும் லாரி வாடகையை பகிர்ந்து கொள்கிறோம், இந்த ஏற்பாடு எங்களுக்குள் இல்லை என்றால் கிழங்கு பிடுங்கும் கூலி, அதுவும் பிடுங்கும் நேரத்தில் வறட்சி என்றால் எங்கள் கதி அதோகதிதான்” என்கிறார்கள் விவசாயிகள் முருகன் மற்றும் சின்னச்சாமி. குச்சி பிடுங்க, கொண்டு செல்லும் வண்டி வாடகை என ஒரு ஏக்கருக்கு எப்படியும் ரூ 1000/- ஆகும், கடைசி யாக மீதியாகும் குச்சிகளில் அடுத் தாண்டு விதைப்புக்கான அடிக்குச் சிகளை வெட்டி எடுத்துக்கொண்டு மேல் குச்சிகளை ஓரிடத்தில் கொண்டு  குவித்து வைத்து அழிக்க நான்கு நாள் கூலி ரூ 800/- என மொத்தமாக ஒரு  ஏக்கர் உற்பத்தி செலவு ரூபாய் 12300/- போக மீதி ரூபாய் 2700/- தான்  ஒரு ஏக்கருக்கு மலை விவசாயிகளுக்கு இறுதியாக கிடைக்கும் விலையாக இருக்கிறது.

இவர்கள் விவசாயம் செய்து பலன்  கிடைப்பதற்குள் யானை, காட்டுப் பன்றி போன்ற காட்டு விலங்கு களின் அழிமாட்டத்தையும், வன  இலாக்கா அதிகாரிகளின் தொந்தரவு களையும் கூடவே சந்தித்து கரையேற வேண்டியுள்ளது. ஒரு ஆண்டு முழு தும் சேர்த்து ஒரு ஏக்கர் விவசாய பூமி யில் இருந்து ரூபாய் 2700/- வருமா னம் கிடைத்தால் அந்த மலை விவ சாயி எப்படி குறைந்தபட்சம் கௌரவ மாகவாவது வாழமுடியும். அவர்க ளின் கோரிக்கை ஒரு டன் குச்சிக்கி ழங்கிற்கு குறைந்தபட்சம் ரூபாய் 10  ஆயிரம் வழங்க வேண்டும். வண்டி வாடகை, வெட்டுக்கூலிக்கு அரசு மானியம் கொடுக்க வேண்டும் என்பதாகும்.  மேலும் தங்களுக்கு அரசு உதவி  செய்ய முன்வருமானால் பர்கூர் மலையில் வெள்ளைப்பூண்டு விவசா யத்தை மிகச்சிறப்பாக செய்யமுடியும் என்கிறார்கள் பர்கூர் மலை விவ சாயிகள். பர்கூர்மலை மண்ணுக்கு  பூண்டு சிறப்பாக விளைகிறதாம். தற்போது கொரோனா பாதிப்பு  காலத்தில் மலைமக்கள் வாழ்வாதா ரத்திற்கு வழியில்லாமல் போதுமான  வருமானம் மற்றும் போக்குவ ரத்து வசதி இல்லாமல் இன்னும்  கூடுதலான சிரமத்திற்கு ஆளாகியுள்ள னர். எனவே மலைவாழ் மக்கள் மற்றும் மலை விவசாயிகள் வாழ்வா தார விசயத்தில் அரசு தனிக்கவ னம் செலுத்தி அவர்களை வாழ வைக்க கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்  ஆகும்.

-ஆர்.முருகேசன், அந்தியூர்