tamilnadu

பிஏபி திட்டத்திற்காக அமைக்கப்பட்ட கால்வாயை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

பொள்ளாச்சி, ஜூலை 26- பொள்ளாச்சி பிஏபி திட்டத்திற்காக அமைக்கப்பட்ட கால்வாயை போர்க் கால அடிப்படையில் சீரமைக்க அப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச் சியை அடுத்த பிஏபி திட்டத்திற்குட் பட்ட ஆழியார் மற்றும் திருமூர்த்தி அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் பல லட்சம் ஏக்கர் விவ சாய நிலங்கள் பயன் பெற்று வருகி றது. ஆனால், பொள்ளாச்சி சுற்று வட்டார கிராமப் பகுதியில் உள்ள விவ சாய நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பிஏபி திட்டக் கிளை கால் வாய்கள் பல இடங்களில் இன்னும் பழு தாகி சிதலமடைந்தும், புதர் மண்டிய நிலையிலும் உள்ளது. இதில், சில கால்வாய்களில் மண், கற்கள் குவிந்து கிடப்பதுடன் பக்கவாட்டு சுவர்கள் உடைந்த நிலையில் உள்ளது. இத னால் கிளைக் கால்வாய்களில் அவ்வப் போது தண்ணீர் கிடைப்பதில்லை என்று அப்பகுதி விவசாயிகள் குற்றஞ் சாட்டினர்.

மேலும், இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும், தற்போது வரை நிதி ஒதுக்கீடு செய்ய நடவ டிக்கை எடுக்கப்படுகிறது என்று கூறு கிறார்களே தவிர செயல்பாடில்லை. எனவே, கிராமப் பகுதி வழியாக செல் லும் பிஏபி கால்வாய்களில் ஏற்பட் டுள்ள புதர்களை அப்புறப்படுத்தி பழு தான இடங்களை கண்டறிந்து, அதனை முழுமையாக சீரமைக்க சம் மந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள் ளனர்.

;