tamilnadu

img

கோவையில் பரபரப்பு: கொரோனா உள்ளதாகக் கூறி அசிங்கப்படுத்திய மாநகராட்சிக்கு நன்றி தெரிவித்து பேனர்

கோவை, செப். 6- கோவையில் ஹோஃப் காலேஜ் அருகே கொரோனா தொற்று இல் லாத தன் குடும்பத்தை கொரோனா தொற்று உள்ளதாகக் கூறி அசிங்கப் படுத்திய கோவை மாநகராட்சிக்கு வாழ்த்துக்கள் என கூறி வைக்கப் பட்டுள்ள பேனரால் பரபரப்பு ஏற் பட்டுள்ளது. கோவை மாவட்டம், பீளமேடு அருகே ஹோஃப் காலேஜ் பகுதி யில் வசிக்கும் நான்கு பெண்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக் கப்பட்டு முடிவுகள் வெளியாகின. குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகள் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி வந்திருந்தன. அதில் அந்த நான்கு பெண்களுக்கும் நோய்த் தொற்று உள்ளதாக அரசு மருத் துவமனையில் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு சென் றபோது நால்வருக்கும் படுக்கை வசதி இல்லை என்று திருப்பி அனுப்பி வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அரசு மருத்துவமனையின் சிகிச்சை மற்றும் பரிசோதனை முடிவுகளை நம்பாத அந்த நான்கு பெண்களும் தனியார் மருத்துவ மனையில் பரிசோதனை மேற் கொண்டுள்ளனர். அதில், அந்த நான்கு பேருக்கும் கொரோனா இல்லை என்று முடிவுகள் வெளி வந்தன. கொரோனா இல்லை என்று தனியார் மருத்துவமனையில் முடிவுகள் வந்த நிலையில், தங்க ளுக்கு கொரோனா இருப்பதாகக் கூறி அசிங்கப்படுத்திய மாநகராட் சிக்கு வாழ்த்துக்கள் எனக் கூறி அந்த நான்கு பேரும் பேனர் அடித்து தங் கள் வீட்டின் முன் ஒட்டியுள்ளனர். மேலும், அவர்கள் வீட்டின் முன்பு கொரோனா தடை செய்யப்பட்ட பகுதி எனவும் மாநகராட்சியால் ஒட்டப்பட்டுள்ளதால் அப்பகுதி யில் சர்ச்சையும், பெரும் பரபரப்பை யும் ஏற்படுத்தியுள்ளது.

;