tamilnadu

ஈரோடு மற்றும் சேலம் முக்கிய செய்திகள்

லாரி ஓட்டுனர் மீது சாதிய வன்மத்துடன் தாக்குதல் தீ.ஒ.மு. தலையீட்டை தொடர்ந்து வன்கொடுமை வழக்குப்பதிவு

ஈரோடு, ஆக. 26- அந்தியூர் அருகே லாரி ஓட்டுனர் மீது சாதிய வன்மத்து டன் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக காவல்துறையி னர் வழக்குப்பதிவு செய்யாமல் தாமதித்த நிலையில் தீ.ஒ. முன்னணியின் தலையீட்டின் பேரில் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுகா நகலூர் கிரா மத்தை சேர்ந்தவர் மயில்சாமி (வயது 35). இவர்  அப்பகுதி யைச் சேர்ந்த அன்னை ரவி என்பவரிடம் மணல் லாரி ஓட்டு னராக பணியாற்றி வந்துள்ளார். ஆனால், அன்னை ரவி ஒப் புக்கொண்டபடி கூலி தராத காரணத்தால், அவரிடம்  வேலையை விட்டு நின்று வேறு இடத்திற்கு வேலைக்கு  சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அன்னை ரவி, மயில்சாமி வேலை செய்து வந்த இடத்திற்கு நேரில் சென்று  அவரை கடுமையாக தாக்கியதுடன், அவரது சாதியை கூறி  இழிவுபடுத்தியும் பேசியுள்ளார். இந்த தாக்குதலில் காயம டைந்த மயில்சாமி அந்தியூர் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து  சிகிச்சை பெற்று வந்த மயில்சாமியை தீண்டாமை ஒழிப்பு  முன்னணியின் நிர்வாகிகள் ஏ.கே.பழனிசாமி, சிபிஎம் நிர்வாகிகள் முருகேசன், மாரிமுத்து, வாலிபர் சங்கத்தின் நிர் வாகி அன்பழகன் உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறி னர். இதற்கிடையே, இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அந்தியூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலை யில், கடந்த 3 நாட்களுக்கு மேலாக வழக்கு பதிவு செய்யாமல் காவல்துறையினர் காலதாமதம் செய்து வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் தலையிட்டின்பேரில் தற்போது  உடனடியாக அன்னை ரவி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் புகார் அளிக்கப்பட மயில்சாமி மீது அக்கிராமத்தை சேர்ந்த ஆதிக்க சாதியினர் கொலை மிரட்டல்  விடுத்து வருகின்றனர். ஆகவே, அவ ருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்குவ துடன், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு சுயவேலைவாய்ப்பு

ஈரோடு, ஆக. 26- ஈரோடு மாவட்டத்தில் இந்த நிதியாண்டிற்கு (2019-20)  கை, கால்கள் மற்றும் காதுகேளாத வாய்பேச இயலாத மாற் றுத்திறனாளிகளுக்கு சுயவேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் ஆவின்பால் பொருட்கள் விற்பனை மையம் அமைக்க ஒருவருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் தங்களது ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டையுடன் 25.09.2019க்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண் ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர்  சி.கதிர வன் தெரிவித்துள்ளார்.

கைரேகை நிபுணர் தேர்வு

சேலம், ஆக. 26-  தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையம் சார்பில், கைரேகை நிபு ணர்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற்றது. சேலத்தில் 3 தேர்வு மையங்களில், 6 தேர்வு கூடங்களில் முற் பகல் மற்றும் பிற்பகல் என இந்த எழுத்து தேர்வுகள்  நடைபெற்றது. இந்நிலை யில் காலையில் நடை பெற்ற தேர்வில் 1720 பேர்  தேர்வெழுத அனுமதிய ளித்திருந்த நிலையில், 1254 பேர் மட்டுமே தேர் வெழுதினர். 466 பேர் தேர்வு  எழுத வரவில்லை.  இந்த தேர்வு மையங்க ளில் மாவட்ட ஆட்சியர் ராமன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் தேர்வு நடைபெறும் மையங் களில் தேர்வர்களுக்கு தேவையான மின்சார வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மேலும் தேர் வர்கள் யாரும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடாமல் இருக்க அரசு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணி யில் ஈடுபடுத்தப்பட்டிருந் தனர். மேலும் வீடியோப் பதிவு  மூலம்  அனைத்து  நிகழ்வுகளும் பதிவு செய் யப்பட்டது.

;