tamilnadu

img

சேலம் மத்திய சட்டக்கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

சேலம், ஜன. 10- சேலம் மத்திய சட்டக்கல்லூரியில் மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து சமத்துவ பொங்கலிட்டு கொண் டாடினர்.  தமிழர் திருநாளான தைத்திருநாள் ஜன. 15ஆம் தேதியன்று  கொண்டாடப்படுகிறது. அதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் சமத்துவப் பொங்கலிட்டு மாணவ மாணவி கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகை யில் சேலம் கோரிமேடு பகுதியில் இயங்கி வரும் மத்திய சட்டக்கல்லூரியில் பொங்கல் விழா நடைபெற்றது. இதற்காகக் கல்லூரி வளாகம் முழுவதும் தோரணங்கள் கட்டி, வண்ணக் கோலமிட்டு சிறப்பான வகையில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் பொங்கல் விழாவைக் கொண் டாடும் வகையில் மாணவிகள் சேலையி லும், மாணவர்கள் வேட்டி சட்டை அணிந் தும் வந்திருந்தனர். கல்லூரிப் பேராசிரி யர்களும் கூட பாரம்பரிய உடைகளான வேட்டி, சட்டை மற்றும் சேலைகள் அணிந்த படி விழாவில் பங்கேற்றனர். அத்துடன் சிலம்பம் நடனம் என கல்லூரி வளாகம் முழு வதும் களைகட்டியிருந்தது. பின்னர் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்து களைத் தெரிவித்துக்கொண்டனர்.  இந்நிகழ்ச்சியில் சட்டக்கல்லூரி செயலாளர் த.சரவணன், முதல்வர் பேகம் பாத்திமா உள்ளிட்ட கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;