tamilnadu

img

ஆங்கிலம் கற்பது எளிதே

இப்போது கீழே ஒரு பத்தி எழுதப்பட்டுள்ளது. இதில் உள்ள பெயர்ச் சொற்களை அடிக்கோடிட்டு உங்கள் நோட்டுப் புத்தகத்தில் எழுதிக் கொள்ளுங்கள் பார்க்கலாம்.

“ஆங்கிலம் கற்க ஆசைப்படுவர்கள் செய்ய வேண்டியது என்ன? அந்த ஆசையை மேலும் தீவிரமாக்கிக் கொள்வதே. ஆசைப்படுவதை அடைய வேண்டும் என்று நினைப்பது மனித இயல்பு. முயற்சி செய்தால் நினைத்ததை அடையலாம். நம் வீட்டின் மின் விளக்குகள், இரவின் நிலவு ஆகியவை கூட நமக்கு இதை உணர்த்துகின்றன. முயற்சி செய்ததால் மட்டுமே தாமஸ் ஆல்வா எடிசன் விளக்கைக் கண்டு பிடிக்க முடிந்தது. முயற்சி செய்ததால் தான் மனிதன் நிலவில் கால் பதித்தான்.”


இந்த பத்தியில் உள்ள noun அனைத்தையும் அடிக்கோடிட்டு, அவற்றை எடுத்து எழுதியவர்கள் good போட்டுக் கொள்ளுங்கள் உங்கள் நோட்டுப் புத்தகத்தில். தமிழில் எழுதி அதற்கு ஆங்கில வார்த்தைகளை எழுதியவர்கள் very good போட்டுக் கொள்ளவும்


Noun பல வகைப்படும். அதுபற்றிப் பிறகு பார்ப்போம். அதற்கு முன் சொல் என்றால் என்ன என்று பார்த்துவிடலாம். எழுத்துக்கள் சேர்ந்ததே சொல். எழுத்துக்கள் சேர்ந்ததே சொல் என்று சொல்லிவிட்டார்கள். எனவே, இப்படி எழுதலாமா? kng முடியாதல்லவா. நமக்குத்தான் தெரியுமே a, e, i, o, u என்ற ஏதாவது ஒரு எழுத்தாவது வரவேண்டும் என்று சரி kngi என்று எழுதி விடுவோமா? கூடாது என்பது தெரியும். நாம்தான் முதலிலேயே படித்தோமே ஒலியை வைத்தே எழுத்தை எழுத வேண்டும். அரசன் என்பதற்கு கிங் என்பது ஆங்கிலச் சொல், கி எனபதற்கு ki; ங் என்பதற்கு ng என்று ஒலியை நினைத்துக் கொண்டு எழுதினால் king என்றால் கிங் அரசன் என்று எளிதாக எழுதிவிடலாம். எழுத்து என்பது letter. எழுத்துக்கள் letters. a, e, i, o, u (y) ஆகியவற்றுக்கு ஒலி உண்டு. மற்ற எழுத்துக்கள் இந்த எழுத்துக்களாலேயே ஒலி பெறுகின்றன.


Letter

Letters

Word

Words

Phrase

Phrases

Clause

Clauses

Sentence

Sentences

Paragraph

Paragraphs



இவற்றுள் நாம் இப்போது Letters, Words பற்றி தெரிந்து கொள்வதே மிக முக்கியம்.

Letters - 26. 


இதுபற்றி ஏற்கனவே கொஞ்சம் கற்றுக் கொண்டோம். 21+5 (Consonants இதர எழுத்துக்கள் + vowels a, e, i, o, u)

Word என்பது எழுத்துக்களின் அர்த்தமுள்ள கோர்வை.


King என்பது king என்று எழுதினால் மட்டுமே பொருள் தரும். ingk என்றோ ngki என்றோ எழுதினால் எந்தப் பொருளும் தராது. எனவே, அர்த்தமுள்ள கோர்வையே Word.

இந்த Word என்பதே வார்த்தை அல்லது சொல். இதைத்தான் நாம் noun, verb, adverb, adjective என்றெல்லாம் வகைப்படுத்து கிறோம்.


பல சொற்களை நாம் அன்றாடம் ஆங்கிலத்தி லேயே பயன்படுத்துகிறோம், நம்மையறி யாமலலேயே. உதாரணத்திற்கு School, Chair, Coffee, Paste, Brush, Doctor, Nurse, Patient இப்படி...




;