tamilnadu

img

கல்வி உரிமைச் சட்டத்தின் முழுபலன் குழந்தைகளுக்குப் போய் சேர வலியுறுத்தல்

திருப்பூர், ஜன. 24 – கல்விக்கான அரசின் முயற்சிகள், கல்வி உரிமைச் சட்டம் ஆகியவற்றின் முழு பலன் குழந்தைகளைப் போய்ச் சேர வேண்டும் என மேலாண்மைத் திறன் வளர்த்தல் பயிற்சி முகாமில் வலி யுறுத்தப்பட்டது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பாக காங்கயம் ஒன்றியம் நத்தக் காடையூர் ஊராட்சி ஒன்றியத் தொடக் கப் பள்ளியில் குறுவள மைய அளவி லான பள்ளி மேலாண்மைக் குழு உறுப் பினர்களுக்கு மேலாண்மைத் திறன் வளர்த்தல் பயிற்சி நடைபெற்றது. நத்தக்காடையூர் அரசு மேல்நிலை பள்ளியைக் குறுவள மையமாகக் கொண்டு அருகிலுள்ள 10 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், 2 நடு நிலைப் பள்ளிகள் இணைக்கப்பட்டுள் ளன.  இப்பள்ளிகளில் செயல்பட்டு வரும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப் பினர்களாக உள்ள  பெற்றோர்கள் பள் ளிக்கு 5 பேர் மற்றும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் இப்பயிற்சி யில் கலந்து கொண்டனர்.  நத்தக்காடையூர்  குறுவள மைய ஆசிரியர் பயிற்றுனர் ம.தாரணி, திருப் பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சமூகப் பணியாளர் அ. ராஜ சேகர், பழைய கோட்டைப்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சு.மூர்த்தி ஆகி யோர் கருத்தாளர்களாகப் பங்கேற்று பயிற்சியளித்தனர்.

அரசுப் பள்ளிகள் உள்ளூர் அளவில் உள்ள பெற்றோர், கல்வியாளர், உள் ளாட்சி அமைப்பின் நிர்வாகிகள் ஆகி யோரைக் கொண்ட சட்டப்பூர்வமான அமைப்பான பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் கண்காணிக்கப்பட வேண்டியது அவசியம். கல்விக்காக அரசு மேற்கொள்ளும் முயற்சிகள், திட் டங்கள், கல்வி உரிமைச் சட்டம் ஆகிய வற்றின் முழுப்பயன் குழந்தைகளைச் சென்றடைய வேண்டும். இதுதான் மேலாண்மைக் குழுக்கள் ஒவ்வொரு பள்ளியிலும் உருவாக்கப்பட்டதன் முதன்மை நோக்கம் என கருத்தாளர் கள் விளக்கினர். ஒவ்வொரு பள்ளியிலும் உள்ளூர் அளவில் சமூகத் தணிக்கைக் குழுக் களை உருவாக்குதல்; பள்ளிக் குழந்தை கள் நலத் திட்டங்கள், வரவு செலவினங் கள், கட்டுமானப் பணிகள் ஆகிய வற்றை கண்காணிக்கும் இத்தகைய சமூகத் தணிக்கைக் குழுவை ஒவ் வொரு பள்ளியிலும் சிறப்பாக செயல் படுதல்;பள்ளி மேம்பாட்டுத் திட் டம் தயாரித்தல்; பள்ளி உள்கட்ட மைப்பு மற்றும் சுகாதார மேம்பாடு; குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு; பாலின சமத்துவம்; கல்வி யில் புதுமைகள் மற்றும் தரக் கண் காணிப்புகள் ஆகியவை குறித்து பயற்சியில் விளக்கப்பட்டன. மருதுறை ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பா.கனகராஜ் பள்ளி மேம்பாடு குறித்து அனுபவங்களைப் பகிர்ந்து கொண் டார். பயிற்சியை காங்கயம் வட்டா ரக் கல்வி அலுவலர் இ.மகேந்திரன், வட்டார வளமைய மேற்பார்வையா ளர் (பொறுப்பு)  ல.சுரேஷ் ஆகியோர் பார்வையிட்டனர். நத்தக்காடையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசியர் மு.விஜயலட்சுமி பயற்சியின் நிறைவில் நன்றியுரை கூறினார்.

;