tamilnadu

img

குறைந்த விலையில் மின்சாரம் வழங்க வேண்டும்

கள்ளக்குறிச்சி, ஜூலை 29- அனைத்து தரப்பு மக்களுக்குக்கும் கட்டுப்  படியான விலையில் மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு  பெற்றோர் நல அமைப்பு மாநாட்டில் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மின் பகிர்மான வட்ட  6ஆவது மாவட்ட மாநாடு உளுந்தூர்பேட்டை யில் தலைவர் ஆர்.அம்பாயிரம் தலைமை யில் நடைபெற்றது. சிறப்புத் தலைவர் என். அருணாச்சலம் கொடியேற்றினார். உபதலை வர் கலியமூர்த்தி வரவேற்றார். உபதலைவர் பி.பெரியநாயகி அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார் மாநாட்டை துவக்கி வைத்து மாற்றுத்  திறனாளிகள் சங்கத்தின் தெற்கு மாவட்டச்  செயலாளர் எம்.ஆறுமுகம் பேசினார். செய லாளர் ஆர்.ராஜாமணி வேலை அறிக்கையை யும், பொருளாளர் கே.ஆறுமுகம் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாநில துணைத் தலைவர் தங்க.அன்பழகன், மண்டலச் செயலாளர் பி.குமாரசாமி, எம்.புரு ஷோத்தமன், கே.விஜயகுமார், கே.தங்கராசு, கே.சலீம், எஸ்.வெங்கடேசன், ஏ.தேவி, எம்.கே.பழனி, ஆர்.ராஜசேகர், டீ.வெங்கடா சலம், ஜி.கேசவன், கே.நீதிமாணிக்கம் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். மாநில பொதுச்  செயலாளர் எஸ்.ஜெகதீசன் மாநாட்டை  நிறைவு செய்து பேசினார். இணைச்செய லாளர் ஜி.கண்ணன் நன்றி கூறினார். மின்துறையை பொதுத்துறையாகவே பாதுகாத்து மேம்படுத்திட வேண்டும், மின்சார  சட்டத் திருத்த மசோதா 2018 ரத்து செய்ய  வேண்டும், மின் உற்பத்தி திட்டங்களை விரைந்து நிறைவேற்றி மின் தட்டுப்பாட்டை போக்கிட வேண்டும், புதிய பென்சன் திட்  டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பண மில்லா மருத்துவம் என்பது உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய தலைவராக கே.ஆறுமுகம், செய லாளராக ஆர்.ராஜாமணி, பொருளாளராக ஜி.கண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.