tamilnadu

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மின்வாரியம்

மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

உதகை, டிச. 6- உபயோகப்படும் மின்சார அளவை காட் டிலும் கூடுதலாக பணம் வசூலிக்கும் மின் வாரியத்தின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்டம், எருமாடு இடைக்குழு செயலாளர் கே. ராஜன், மின் வாரிய மேற்பார்வை பொறியா ளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப் பட்டுள்ளதாவது, சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட சேரம்பாடி, எருமாடு உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரத்தை பயன்படுத்தும் பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று, மின் உபயோகத்தை முறையாக கணக் கீடு செய்யாமல்  மின்வாரியமே மின்கட்ட ணத்தை நிர்ணயிக்கிறது. இதனால் மின் சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் நபர் கள் கூட  அதிக கட்டணம் செலுத்தும் நிலை காணப்படுகிறது.   மேலும், 100 யூனிட்டுக்கு குறைவாக உப யோகிப்பவர்கள் மின்கட்டணம் செலுத்த தேவையில்லை. ஆனால், இதனை அறியாத மக்கள் பல  மாதங்களாக  அதிக கட்டணத் தையே செலுத்தி வருகின்றனர். இவ்வாறு அதிக கட்டணம் வசூலிப்பதால் அப்பகுதி மக்கள் கடுமையாக  பாதிப்படைகிறார்கள். எனவே மின் உபயோகத்தை முறையாக கணக்கீடு செய்து மின் கட்டணத்தை வசூ லிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.