கடலூர், ஜூன் 3-கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் பி.வெங்கடேசன் தலைமை தாங்கினார். இணைப் பொது செயலாளர் டி.புருஷோத்தமன், நிர்வாகிகள் செல்வகணபதி, டாக்டர் கண்ணன், பச்சையப்பன், சண்முகம், சுகுமாரன், கண்ணபிரான், காசிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் எம்.மருதவாணன் வரவேற்று கூட்டமைப்பு சார்பில் கல்வி உதவிக்கு தத்து எடுத்து படிக்க வைக்கும் மாணவர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.கூட்டமைப்பு கல்வி தத்து எடுத்து படிக்க வைக்கும் பள்ளி மாணவர்கள் மாறன், மணிகண்டன், செல்வகணபதி, தொல்காப் பியன், நரேந்திரன், பாலாஜி, மற்றும் கல்லூரி மாணவர்கள் மணிவேல் ஏழுமலை ஆகியோரின் முழு படிப்புச் செலவையும் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.கடலூர் செயின்ட் ஜோசப் மேனிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதல் மாணவனாக வந்த ஏழுமலை மாணவருக்கும், செயின்ட் ஜோசப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் பள்ளியில் இரண்டாவது மாணவனாக வந்த பாலாஜி என்ற மாணவருக்கும் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.