கோவை, மார்ச் 16 – கோவை குமாரசாமி காலனி மக் களை விரட்டியடிக்கும் நடவடிக்கை யைக் கண்டித்து திங்களன்று போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரைபோலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம், காந்தி பூங்கா அருகே அமைந்துள்ள குமார சாமி காலனி மற்றும் பூசாரிபாளை யத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் வசித்து வருகின்றனர். மூன்று தலைமுறைகளுக்கு மேலாக வசித்து வரும் இவர்களை ஸ்மார்ட் சிட்டி என்கிற பெயரில் கோவை மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்ப டுத்த நடவடிக்கை எடுத்து வருகி றது. இந்நிலையில் தங்கள் வாழ் வாதாரம் அனைத்தும் நகரத்தி லேயே இருந்து வரும் நிலையில், நகரத்தையொட்டியே மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து அப்பகுதிமக் கள் போராடி வருகின்றனர். இதன்ஒருபகுதியாக திங்க ளன்று அனைத்து கட்சியினர் தலை மையில் குமாரசாமி காலனி மற்றும் பூசாரிபாளையம் பகுதி மக்கள் அப்ப குதியில் உண்ணாவிரதப் போராட் டத்தில் ஈடுபட்டனர். இப்போராட் டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் முன்னூறுக்கும் மேற்பட் டோரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி மண்டபத்தில் அடைக்கப்பட்ட வர்களை மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.இராம மூர்த்தி, சிபிஐ கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆறுமு கம் உள்ளிட்டோர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.