tamilnadu

img

பங்கு மார்க்கெட் சூதாட்டத்துக்கு எல்ஐசி சேமிப்பா? திருப்பூரில் எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஆக. 9 – இந்திய மக்களின் நம்பகமான சேமிப் பாகத் திகழும் எல்ஐசி பணத்தைப் பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்து சூதாடக் கூடாது என வலியுறுத்தி திருப்பூரில் எல்ஐசி முகவர்கள் சங்கம் (லிகாய்) ஆர்ப்பாட்டம் நடத்தியது. திருப்பூர் ஜம்மனை எல்ஐசி அலுவலக வளாகத்தில் வெள்ளியன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு லிகாய் சங்க கிளைத் தலைவர் ஆனந்த நாராயணன் தலைமை வகித்தார். இதில் பங்கு சந்தை முதலீட்டையும், பொதுத்துறைநிறு வனப் பங்குகளை தனியாருக்குத் தாரை வார்ப்பதையும் கண்டித்து, போராட்ட நோக்கத்தை விளக்கி லிகாய் மாநில செயலாளர்கள் பி.குமார், பி.ராஜேஷ் ஆ கி யோர்உரையாற்றினர். இந்த போராட் டத்தை வாழ்த்தி அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி பேசினார். இதில் லிகாய் கோட்ட பொறுப் பாளர்கள் வி.மணிகண்டன், ஏ.வரதராஜன் உள்பட திருப்பூர் கிளை எல்ஐசி முகவர் கள் சங்கத்தினர் திரளானோர் கலந்து கொண்டு முழக்கம் எழுப்பினர்.

;