தஞ்சாவூர், செப்.13 - எல்.ஐ.சி. முகவர்களின் கமிஷன் குறைப்பு ஐ.ஆர்.டி.ஏ. ஆலோசனையைக் கண் டித்து எல்.ஐ.சி. முகவர் சங்கம் (லிகாய்) சார்பில் தஞ்சை கோட்டம் பட்டுக் ்கோட்டை கிளை அலுவ லகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, கிளைத் தலைவர் எம்.சுந்தர்ராசு தலைமை வகித்தார். மாநில செயல்தலைவர் அ.பூவ லிங்கம், கோட்ட துணைத் தலைவர் அன்பு.நடராசன், ஊழியர் சங்கத் தலைவர் வி.எஸ்.பாலகிருஷ்ணன் மற்றும் கண்டன உரையாற் றினர்.
கும்பகோணம்
கும்பகோணம் எல்ஐசி கிளை -1 முன்பு எல்ஐசி முக வர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத் திற்கு முகவர்கள் சங்க கிளை செயலாளர் முத்து கிருஷ்ணன் தலைமை வகித் தார். ஆயுள் காப்பீட்டுக் கழக கோட்ட இணைச் செய லாளர் சேகர், கிளைத் தலை வர் சுரேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
சீர்காழி
சீர்காழி கிளை அலுவ லகம் முன்பு லிகாய் கிளைத் தலைவர் பட்டியமேடு எஸ்.பத்மநாபன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை கோட்ட துணைத் தலைவர் கே.தமிழ்ச்செல் வன், கிளை அமைப்பு செய லாளர் கே.கேசவன், கிளைச் செயலாளர் ஆர்.எஸ்.இளங் கோவன், கிளை பொருளா ளர் டி.முருகு பாண்டியன் உள்ளிட்டோர் கண்டன உரை யாற்றினர்.