tamilnadu

img

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் பி.ஆர்.நடராஜன் எம்.பி. பங்கேற்பு

கோவை, ஜன. 28-  கோவை மாவட்ட வளர்ச்சி ஒருங்கி ணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வா யன்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் நடை பெற்றது. ஊரக உள்ளாட்சி தேர்தல் நிறைவ டைந்து மாவட்ட வார்டு தலைவர், ஊராட்சி  ஒன்றிய தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கி ணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக் கப்பட்டு அதன் ஆலோசனை கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்குழுவின் தலைவராக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளார். கடந்த மூன் றாண்டுகளுக்கு மேலாக இதுபோன்ற ஆலோசனை கூட்டம் நடைபெறாத நிலை யில் செவ்வாயன்று இக்கூட்டம் நடை பெற்றது.  முன்னதாக இக்குழுவின் செயலா ளராக உள்ள மாவட்ட ஆட்சியர் கு.ராசா மணி இக்கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து  பேசினார். இதனைத்தொடர்ந்து இக்குழு வின் தலைவர் பி.ஆர்.நடராஜன் பேசுகை யில், அரசுபள்ளிகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, ரயில்நிலையங்களின் அடிப்படை வசதி,  கிராமப்புற பகுதிகளில் நிறைவேற்றப் படாத அடிப்படை வசதிகளை மேம்படுத் துவது குறித்து பேசினார். மேலும் கோவை மாநகரத்தில் செயல்படுத்தப்படும ஸ்மார்ட் சிட்டிக்கான நிதி ஒதுக்கீடு, மேற் கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்க சிறப்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்தார்.  இதனைத்தொடர்ந்து மாநகராட்சி, மாவட்ட அதிகாரிகள், வங்கி, ரயில்வே மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகி யோர் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து  விரிவான ஆலோசனை மேற்கொண்ட னர். இதில் பொள்ளாச்சி நாடாளுமன்ற  உறுப்பினர் சண்முகசுந்தரம், மாநிலங்க ளவை உறுப்பினர்கள் ஒ.கே.சின்னராஜ்,  எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

;