tamilnadu

img

வழக்கமான குளறுபடிகளுடன் நடத்தி முடித்த மாவட்ட நிர்வாகம்

திருப்பூர் இரண்டாவது கட்டத் தேர்தல்: 

திருப்பூர், டிச. 30 – திருப்பூர் மாவட்டத்தில் வழக்க மான குளறுபடிகளுடன், எவ்வித மாற் றமும் இல்லாமல் இரண்டாவது கட்ட வாக்குப் பதிவு ஆறு ஊராட்சி ஒன்றி யங்களில் திங்களன்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 27ஆம் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவு ஏழு ஊராட்சி ஒன்றியங்களில் நடந்து முடிந்தது. இது தவிர அவிநாசி, பொங்கலூர், குண்டடம், குடிமங்கலம், மடத்துக்குளம், உடுமலைபேட்டை ஆகிய ஆறு ஊராட்சி ஒன்றியங்களில் இரண்டாவது கட்டமாக டிச.30ஆம் தேதி திங்களன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப் பதிவுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவின்போது இடம் பெற்ற குளறுபடிகள் எதுவும் களை யப் படாமல் அப்படியே மீண்டும் தொடர்ந்தது. குறிப்பாக வாக்காளர்க ளுக்கான பூத் சிலிப்புகள் முழுமை யாக வாக்காளர்களிடம் சேர்க்கப்பட வில்லை. வாக்குச் சாவடி மையங்க ளில் அந்தந்த வாக்குச் சாவடியின் முன்பாக வேட்பாளர் பெயர், அவர் போட்டியிடும் சின்னம் உள்ளிட்ட விபரங்கள் சுவரொட்டியில் அச்சிடப் பட்டு இருக்க வேண்டும், ஆனால் முதல் கட்டத் தேர்தலில் வேட்பாளர் பெயர், சின்னங்கள் எழுத்தால் எழு தப்பட்டிருந்தன. இந்த குறைபாட்டை அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டிய நிலையிலும், இரண்டாவது கட்டத் தேர்தலின்போதும் அப்படியே இது தொடர்ந்தது. மேலும் 1000க்கு அதிக வாக்காளர்கள் இருக்கக்கூடிய வார்டு களில் இரு வாக்குச் சாவடிகள் அல் லது ஒரே வாக்குச் சாவடியில் ஆண் கள், பெண்களுக்குத் தனித்தனி அறைகள் ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கேட்கப்பட்டது. அதுவும் நடைபெறவில்லை. எனவே மக்கள் நெருக்கம் மிகுந்த ஊராட்சிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவின்போது ஏற்பட்ட அதேபோன்ற தாமதம் இரண்டாம் கட்ட தேர்தலிலும் ஏற் பட்டது.

இது தவிர வாக்காளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், மாற்றுத் திறனாளி வாக் காளர்கள் வந்து வாக்களிக்க சாய்தள பாதை, சக்கர நாற்காலி ஆகியவை ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஆனால் அதுவும் முழுமையாக ஏற் பாடு செய்யப்படவில்லை. பொங்க லூர் ஒன்றியம் கொடுவாயில் உள்ள வாக்குச் சாவடி ஒன்றில் ஒரே குடும்பத் தைச் சேர்ந்த மூன்று பேர் மாற்றுத் திற னாளிகளாக இருந்த நிலையில் வாக் களிக்க வந்த அவர்கள் மிகவும் சிரமப் பட்டு வாக்களித்தனர். கொடுவாய் லட்சுமி நகரை சேர்ந் தவர் பாலகிருஷ்ணன். இறைச்சிக் கடையில் வேலை செய்கிறார். இவ ரது மனைவி அன்னக்கோடி. இவர்க ளுக்கு இரு பெண்கள், ஒரு ஆண் என மூன்று குழந்தைகள். இவர்கள் மூவ ரும் மாற்றுத் திறனாளிகள். இவர் கள் கொடுவாய் அரசு தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்க ளிக்க வந்தனர். ஆனால் அங்கு  சக்கர நாற்காலி ஏற்பாடு செய்யப்பட வில்லை. எனவே சாய்வுதளத்தில் பெரும் சிரமத்துடன் சென்று வாக்குச் சாவடியில் வாக்களித்தனர். வாக்காளர்களுக்கு மட்டுமின்றி, வாக்குச்சாவடியில் தேர்தல் பணிக்கு வந்த ஆசிரியர்களுக்கும் உரிய அடிப்படை வசதிகள் பல இடங்களில் நிறைவேற்றித் தரப்படவில்லை என்று புகார் தெரிவித்தனர். பல்வேறு தரப்பினரின் அதிருப் தியை அலட்சியப்படுத்திவிட்டு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் இந்த இரண்டாவது கட்ட வாக்குப் பதிவை நடத்தி முடித்திருக்கிறது. அதேசம யம் ஜனவரி 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மையங்களில் மாவட்ட நிர்வாகம் தேர்தல் ஆணைய விதி முறைப்படி உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று தேர்தல் பணி அலுவலர்கள், அரசியல் கட்சி யினர் வற்புறுத்தி உள்ளனர்.
 

;