tamilnadu

img

கொரோனா வார்டில் பணி வழங்குவதில் பாகுபாடு: செவிலியர்கள் போராட்டம்

சிதம்பரம், மே 8- கடலூர் மாவட்டம் சிதம்ப ரத்தில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் இம்மருத்துவ மனையில்தான் கொரோனா தொற்று கண்டறியும் ஆய்வுக் கூடம் உள்ளது. இந்த மருத்துவமனை யில் பணியாற்றும் 5 செவி லியர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக கூறப்  படுகிறது. மேலும் மருத்துவ மனையில் பணியாற்றும் செவிலியர்களுக்கு போது மான கவச உடை, கை கிள வுஸ் உள்ளிட்ட எந்த உப கரணமும் வழங்கவில்லை என செவிலியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உயிர் காக்கும் பாணியில் ஈடுபட்டுள்ள அனைத்து ஊழியர்களுக்கும் அடிப் படை வசதிகள் செய்து கொடுக்க வலியுறுத்தி வெள்ளியன்று (மே 8) அனைத்து செவிலியர்களும் பணியை புறக்கணித்து மருத்துவக் கல்லூரி கண்கா ணிப்பாளரை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர்.

அப்போது செவிலி யர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், மருத்துவ மனையின் ஒரு பகுதியில் மட்டும் கொரோனா வார்டு அமைக்காமல், மருத்து வமனை முழுவதும் கொரோனா வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இத னால் ஊழியர்கள், செவிலி யர்கள், மருத்துவர்கள் என  அனைவருக்கும் கொரோனா பரவுகிறது. செவிலியர்கள், மருத்துவர்கள் என அனை வருக்கும் கவச உடை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். ஆனால் இன்றுவரை நிர்வா கம் எந்த உபகரணங்க ளையும் வழங்கவில்லை என்றனர். மேலும் பல்கலைக்கழ கத்தில் பணியாற்றும் ஊழி யர்களின் உறவினர்கள், அதிமுக ஆதரவு சங்கத்தை சார்ந்த ஊழியர்களின் உற வினர்கள் இங்கு பணி யாற்றுகிறார்கள். அவர்க ளுக்கு கொரோனா வார்டு  பகுதிகளில் பணி ஒதுக்கப்படு வதில்லை. மருத்துவமனை யில் பணியாற்றும் அனைத்து செவிலியர்களுக்கும் பார பட்சமில்லாமல் கொரோனா வார்டில் பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். இதற்கிடையே பல் கலைக்கழக பதிவாளர் கிருஷ்ணமோகன், மருத்து வமனை கண்காணிப்பாளர் சண்முகம், சிதம்பரம் காவல் துறை டிஎஸ்பி கார்த்தி கேயன் ஆகியோர் செவிலி யர்கள் மற்றும் ஊழியர்  கள் மத்தியில் பேச்சு வார்த்தை நடத்தி அனைத்து  வசதிகளையும் செய்து  கொடுப்பதாக உறுதியளித்த னர்.