tamilnadu

தருமபுரி மற்றும் நாமக்கல் முக்கிய செய்திகள்

வேகத்தடைக்கு வெள்ளை வண்ணம் அடிக்க வலியுறுத்தல்

தருமபுரி, ஜூலை 2- தருமபுரியில் உள்ள  மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே உள்ளது அப்பாவு நகர். இப்பகுதியில், சாலை குண்டும் குழியுமாக இருந் தது. இச்சாலையை சீரமைக்க வேண்டுமென அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப் படையில்  கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அப்பாவு நகர் முழுவதும் தார் சாலை போடப்பட்டன. அந்த தார் சாலையில் இரண்டு இடங்களில்  பெரிய வேகத் தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த வேகத்தடையைக் குறிக்கும் வெள்ளை நிற வண்ணம் அடிக்காததால், விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, வெள்ளை நிற வண்ணம் அடிக்கவும், அறிவிப்பு  பலகை வைக்கவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில்  ரூ.120 லட்சத்தில் தடுப்பணைகள்

மாவட்ட ஆட்சியர் தகவல்

நாமக்கல், ஜூலை 2- நாமக்கல் மாவட்டத்தில் ரூ.120 லட்சத்தில் தடுப்பணைகள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள் ளதாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட் டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.ஆசியா மரியம் தலை மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டத் தின் அனைத்துப் பகுதிகளிலும் விதைகள் மற்றும் உரங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்கள்,  தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நாமக் கல் மாவட்ட விவசாயிகள் தங்களிடம் உள்ள ஆண்ட் ராய்டு கைபேசியில் “உழவன்” செயலியை பதி விறக்கம் செய்து கொண்டு தங்களுக்கு தேவைப்படும் வேளாண்மை சார்ந்த விபரங்களை உடனுக்குடன் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது.  2019-20 ஆம் ஆண்டிற்கு இலக்காக 120 உழவர் ஆர்வலர் குழு மற்றும் 24 உழவர் உற்பத்தியாளர் குழு இலக்கு பெறப்பட்டுள்ளது உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கும் பணி அனைத்து வட்டாரங் களிலும் நடைபெற்று வருகிறது. கொல்லிமலை வட்டாரத்தில் உள்ள செம்மேடு மற்றும் படசோலை அரசு தோட்டக்கலை பண்ணைகளில் சில்வர்ஓக் 14500 செடிகள், காப்பி 8700 செடிகள், மிளகு 11000 செடிகள், பலா 2500 செடிகள், அன்னாசி 11250 செடி கள், மல்லிகை 5665 செடிகள், கொய்யா 850 செடிகள் மற்றும் எலுமிச்சை செடிகள் விவசாயிகளுக்கு விநியோகிக்க தயாராக இருப்பில் உள்ளது.

மழை அளவு

நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை  அளவு 716.54 மி.மீ. 2019 ஆம் ஆண்டு ஜுன் மாதம் முடிய இயல்பு மழை அளவு 186.95 மி.மீ ஆகும்.  தற்போது வரை 129.63 மி.மீ. மழை பெறப்பட்டுள் ளது.  சராசரிக்கும் குறைவாக 57.32 மி.மீ. மழை அளவு பெறப்பட்டுள்ளது. (சென்ற வருடம் 2018-ஆம் ஆண் டில் பெறப்பட்ட மொத்த மழை அளவு 523.05 மி.மீ. ஆகும். சராசரிக்கும் குறைவாக 193.49 மி.மீ. மழை அளவு பெறப்பட்டுள்ளது. நீடித்த மானாவாரி சாகுபடி இயக்கம் பகுதி-3  திட்டத்தின் கீழ் நுழைவு முகப்புப் பணிகளின் கீழ், தற்போது 22 பெரிய தடுப்பணைகள், 2 எண்கள் நடுத்தர தடுப்பணைகள், 1 கிராமக் குட்டை அமைக்க ரூ.120 லட்சத்தில் 25 பணிகள் தொடங்கப்பட்டு, இதில் 6 பணிகள் முடிவுற்று ரூ.30 லட்சத்திற்கு பட்டி யல் தயாரிக்கப்பட்டு வருகிறது.  மேலும் 19 பணிகள்  நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டார்.

 

;