tamilnadu

img

விடைத்தாள் திருத்தும் மையங்களை சுத்தம் செய்ய கல்வித் துறை உத்தரவு

சென்னை, மே 22- 12ஆம்  வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையங்களைச் சுத்தம் செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்  ணப்பன் அனைத்து மாவட்ட  முதன்மைக் கல்வி அலுவலர்க ளுக்கும் கடிதம் அனுப்பி யுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதி யுள்ள கடிதத்தில், “10, 11, 12ஆம்  வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மற்றும் விடைத்தாள் திருத்தும் மையங்களாகச் செயல்படும் பள்ளிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட வேண்டும்.

12 ஆம் வகுப்பு மாணவர்க ளின் விடைத்தாள்கள் வரும்  27ஆம் தேதி முதல் திருத்தப் பட வுள்ளன. ஊரடங்கு காரணமாக நீண்ட நாள்க ளாக வகுப்பறைகள் உபயோகப்படுத்தப்படாமல் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரி யர்களிடம் வேலையாட்களைக் கொண்டு அறைகளை நன்கு கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய அறி வுறுத்த வேண்டும். மேலும் விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு வரும்  ஆசிரியர்கள் உள்ளே நுழையும்  போதும், வெளியே செல்லும் போதும் கிருமிநாசினி கொண்டு  கைகளைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என அறி வுரை வழங்க வேண்டும். பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்துக் கட்டடங்கள், அறை கள் ஆகியவற்றை காலை,  மாலை என இரு வேளைகளும் லைசால் போன்ற கிருமிநாசினி  கொண்டு சுத்தம் செய்ய வேண் டும்” எனத் தெரிவித்துள்ளார்.

;